By Village Missionary Movement
Saturday, 30-May-2026இன்றைய தியானம்(Tamil) 30.05.2026
தேவனுக்கான பங்களிப்பு
“...கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே;..” - அப். 9:5
தேவனை அறியாத குடும்பத்தை சார்ந்த ஒரு சகோதரிக்கு வாழ்க்கையில் அநேக போராட்டங்களும், பிரச்சனைகளும் இருந்தது. அவளுடைய கணவர் திடீரென வியாதிபட்டு இறந்து போனதால் தனக்கென யாருமே இல்லை என்று தன்னுடைய வாழ்வை முடிக்க தீர்மானித்தாள். ஒரு நாள், கதவை பூட்டி வீட்டினுள் இருந்தவாரே அழுது கொண்டு, என்னை நேசிக்க, எனக்கு உதவி செய்ய யாருமில்லையே என்று சோர்ந்து போன வேளையில் அவளுக்கு ஒரு சத்தம் கேட்டது. அது என்னவென்றால், இயேசு கிறிஸ்துவினாலும், பிதாவாகிய தேவனாலும் உனக்கு நன்மையும், கிருபையும் உண்டாவதாக என்று. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பயத்துடனும், கண்ணீர் நிறைந்த கண்களுடனும் காணப்பட்டாள். அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது அவர்கள் இது பைபிளில் எழுதப்பட்டுள்ள தேவ வார்த்தை என்றார்கள். இயேசுவைப் பற்றி அறிய அருகில் உள்ள தேவாலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தாள். தனிமையில் வாடி நின்ற என்னைத் தேடி இயேசு வந்திருக்கிறார் என்று தன்னை முழுவதுமாக அவருக்கு அர்ப்பணித்து, தேவனுடைய ஊழியத்தை செய்ய ஆரம்பித்தாள். கர்த்தர் அவளுடைய வாழ்க்கையை ஆசீர்வாதமாய் மாற்றினார்.
வேதாகமத்திலும் கூட அப். 9:1-27 வரை உள்ள வசனத்தில் சவுல் இயேசுவின் சீஷரைப் பயமுறுத்தி, துன்பப்படுத்தி, சபையை பாழாக்கினார். இயேசுவை பின்பற்றின சீஷர்களை கைது செய்து சிறையில் போட முயன்றார். ஒரு நாள் தமஸ்கு என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றி பிரகாசித்ததும், சவுல் தரையில் விழுந்தார். அப்பொழுது சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். சவுல் மூன்று நாட்கள் பார்வையில்லாமல் புசியாமலும் குடியாமலும் இருந்தார். சவுல் நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்று கர்த்தரிடம் தன்னைத் தாழ்த்தினார். சவுலின் இருதயம் மாறி, சவுல் பவுலாக மாறுகிறார். இயேசுவை எதிர்த்தவர் நற்செய்தியை பரப்பினார். அவர் எழுதிய கடிதங்கள் வேதாகமத்தில் முக்கிய இடங்களை பெற்றுள்ளது. அவர் வாழ்க்கையின் இறுதியில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்றார். தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து இயேசுவுக்கென்று இரத்த சாட்சியாக மரித்தார்.
அன்பானவர்களே, சவுலை நோக்கி கர்த்தருடைய சத்தம் வந்த போது தன்னைத் தாழ்த்தினார். அதே போல கர்த்தருடைய சத்தம் நம்மை நோக்கி வரும் போது நம்மை தாழ்த்தி ஆண்டவரிடம் அர்ப்பணிக்க வேண்டும். ஆண்டவரே, என் கண்களைத் திறந்தருளும். என் பாவசெதில்கள் என்னிலிருந்து விழட்டும் என்று நாம் கேட்கும் போது, மாரா போன்ற கசப்பான நம் வாழ்க்கையை ஆண்டவர் மதுரமாக மாற்றுவார்.
- S. சிந்து
ஜெபக்குறிப்பு:-
டியூசன் சென்டருக்கு வரும் பிள்ளைகள் உள்ளத்தில் கேட்ட வசனம் கிரியை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864