Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.06.2026
Share:

By Village Missionary Movement

Saturday, 13-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 13.06.2026

 

பூமியில் தேவனின் நந்தவனம்

 

“...நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்...” - யோசுவா 24:15

 

இந்த உலகில் தேவன் நிறுவிய முதல் அமைப்பு குடும்பம். மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று கூறி, தேவன் குடும்ப உறவை உருவாக்கினார். குடும்பம் என்பது அன்பு நிறைந்த இடமாக, நம்பிக்கையின் அஸ்திபாரமாக காணப்பட வேண்டும். அதுவே தேவனை அறியும் முதல் பள்ளி.

 

1. வேதாகம அடிப்படையில் குடும்பம்  

“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;” (சங்.127:1). குடும்பம் என்பது தேவன் ஏற்படுத்திய பரிசுத்த உடன்படிக்கை. கணவன்-மனைவி அன்பில் ஒன்றுபட வேண்டும்; பெற்றோர் குழந்தைகளை தேவபயத்தில் வளர்க்க வேண்டும். தேவனை மையமாக கொண்டு இயங்கும் குடும்பம் சோதனைகளிலும் நிலைத்திருக்கும்.

 

2. குடும்பம் ஒரு சிறிய சபை

“...நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்றார் யோசுவா. ஒவ்வொரு வீடும் ஒரு சிறிய சபை. ஜெபம், வேதவாசிப்பு, ஆன்மீக உரையாடல், ஒழுக்கம் ஆகியவை காணப்பட வேண்டும். அன்பில் ஒன்றுபட்ட இருதயங்கள் வாழும் இடம் தான் குடும்பம். “ஒருவரையொருவர் மன்னியுங்கள்” மன்னிப்பு இல்லாத குடும்பம் நிலைக்காது.

 

3. இன்றைய சவால்கள்

வேலை பளு, நேரமின்மை, கைபேசி, கணிணிக்கு அடிமையாதல், தலைமுறை இடைவெளி இவையெல்லாம் குடும்பங்களை உள்ளிலிருந்து அரிக்கும் கரையான்கள் போல வெளியே தெரியாமல் அரித்துவிடும். இவற்றால், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் மனதளவில் தூரம் அதிகரிக்கிறது. இந்த இடைவெளியை நிரப்புவது அன்பும், குடும்பத்திற்காக செலவிடப்படும் நேரமும் தான்.

 

4. எதிர்கால தலைமுறையினருக்கான பொறுப்பு

குடும்பங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறது. நாம் விதைப்பது நன்மையானாலும், தீமையானாலும் அவர்களே அதை அறுப்பார்கள். தேவனை மையமாகக் கொண்ட குடும்பம் தொடர்ந்து முன்னேற்றம் அடையும். குடும்பம் என்பது அன்பை கொண்டு வாழும் இடம். நாங்கள் குடும்பமாய் “கர்த்தரையே சேவிப்போம்” என்ற தீர்மானம் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கட்டும்.

- Mrs.S. பெர்லின் செல்லாபாய்

 

ஜெபக்குறிப்பு:-

எல்லா தாலுகாவிலும் Mission Action Centre கட்டப்பட ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al superbetin pashagaming jojobet jojobet giriş instagram unban service instagram unban service matbet matbet