By Village Missionary Movement
Sunday, 14-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 14.06.2026 (Kids Special)
இரக்கமுள்ளவனாயிரு
“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” - மத்தேயு 5:7
Hai குட்டீஸ், எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? நிச்சயம் நல்லா இருப்பீங்க. Leave ஐ நல்லா enjoy பண்ணியிருப்பீங்க அப்படித்தானே. இப்ப மறுபடியும் பாடம் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. நல்லா படிக்கணும் சரியா குட்டீஸ்.
இப்போ ஒரு தமாஷான, அதே நேரத்தில் நல்ல அர்த்தம் கொண்ட கதையை பார்க்கலாமா? அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா குட்டீஸ். அவர் இந்த பெரிய பதவிக்கு வரும்முன் வழக்கறிஞராக இருந்தார். அப்பொழுது அவரிடம் ஒரு வழக்கு வந்தது. அதில் ஒரு பணக்காரர், ஒருவரை அவரிடம் கூட்டி வந்து, இவர் என்னிடமிருந்து 5 டாலர் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. அதனால் நான் இவர்மேல் வழக்கு போடப் போகிறேன் என்று சொன்னார். அதை கேட்ட ஆபிரகாம் லிங்கனுக்கு அவர் மேல் இரக்கம் வந்தது. இவரோ ஏழை மனிதர், வெறும் 5 டாலர் தானே, உங்களால் அதை மன்னிக்க முடியாதா? என்று அந்த பணக்காரரிடம் கேட்டார். ஆனால் அந்த பணக்காரரோ இல்லை, என்னால் மன்னிக்க முடியாது. சரி இந்த வழக்கு போட எவ்வளவு செலவு ஆகும்? என்று கேட்டார். 10 டாலர் என்றார் லிங்கன். தன் பாக்கெட்டிலிருந்து 10 டாலரை எடுத்து கொடுத்தார் பணக்காரர். லிங்கன் அதிலிருந்து 5 டாலரை எடுத்து அந்த ஏழை மனிதரிடம் கொடுத்து, “இந்த பணத்தை அவருக்கு திருப்பி கொடுத்து விடுங்கள்” என்றார். அந்த நிமிஷத்திலேயே பிரச்சனை முடிந்துவிட்டது! அந்த ஏழை மனிதருக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே தெரியவில்லை. பாருங்க குட்டீஸ், ஒரு நிமிஷத்திலேயே அவர் அந்த பிரச்சனையை எவ்வளவு அழகாக தீர்த்தார் பார்த்தீங்களா.
அதுபோலவே, நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று நாம் ஜெபிக்கிறோம் அல்லவா. வேதாகமம் சொல்லுகிறது: “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்.” நாம் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, ஆண்டவர் நமக்கு அதை திருப்பி கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். அதனால் நாம தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்து, ஆண்டவருடைய அன்பை அவர்களுக்கு காட்ட வேண்டும். ஆபிரகாம் லிங்கன் அந்த ஏழை மனிதர் மேல் இரக்கமாயிருந்தது போல, நாமும் பிறருக்கு உதவி செய்து அதன் மூலம் இயேசுவின் அன்பை மற்றவர்களும் அறியச் செய்யலாம்.
சரி குட்டீஸ், நீங்க என்ன ஆக போறீங்க? டாக்டரா? டீச்சரா? பாஸ்டரா? எதுவாக இருந்தாலும், ஆண்டவருக்கு பயந்து அவருக்கு கீழ்ப்படிந்து வாழணும். நீங்கள் எல்லாரும் எதிர்காலத்துல நல்ல மிஷனெரிகளாக வரணும்.o.k வா.
- Sis. தெபொராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864