By Village Missionary Movement
Monday, 22-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 22.06.2026
சிறுத்தையின் ஓட்டம்
"...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" - எபிரெயர் 12:1
ராஜூவும், அவர் மகனும் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்தனர். அதில் ஒரு சிறுத்தை சமவெளியில் ஆகாரத்திற்காக ஒரு மானை விரட்டி ஓடியது. மானை, சிறுத்தை பிடித்து விடுமா என மகன் ஆவலோடு பார்த்து கொண்டிருந்தான். ஆனால் அந்த மான் தப்பி ஓடி விட்டது. உடனே அவன் ' ச்சே' சிக்காமல் தப்பி விட்டதே என்றான். அப்பா மகனே, சிறுத்தை ஆரம்பத்தில் வேகமாக ஓடியது. ஆனால் தொடர்ந்து அதே வேகத்தில் அதனால் ஓட முடியவில்லை களைப்படைந்து விட்டது. இதே போல் தான் நீயும் இரட்சிக்கப்பட்ட புதிதில், தீர்மானம் எடுத்த வருடத்தின் ஆரம்பத்தில், வேத வாசிப்பு, ஜெபம் என தேவனிடத்தில் நெருங்கி இருந்தாய். பின் நாட்கள் செல்லச் செல்ல வேகம் குறைந்து அவரை விட்டு தூரமாகி விடுகிறாய் என்றார்.
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் உவமைகளைக் கொண்டு மக்களிடம் பேசினார். அவ்வாறு பேசுகையில் விதைக்கிறவனின் உவமையைக் கூறினார். விதை தான் வேத வசனம். விதை பாதையில், கற்பாறையில், முள்ளுள்ள இடத்தில், நல்ல நிலத்தில் என பல இடங்களில் விழுகிறது. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் பரலோக ராஜ்யத்திற்குரியவர்கள். பாதையில் விதைக்கப்பட்ட விதையை பறவைகள் கொத்தி செல்வது போல், பிசாசு வசனத்தை பலன் கொடுக்க விடாமலே பறித்து செல்கின்றான். கற்பாறை, முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்ட விதை முளைக்கும், ஆனால் நிலைக்காது. அதாவது சிறுத்தையின் ஓட்டத்தைப் போல துவக்கத்தில் வேகமாக இருக்கும். ஆனால் உலகின் கவலை, கஷ்டம், நெருக்கம் வந்ததும் தேவனை விட்டு பின்வாங்கி விடுகின்றனர். அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் பலப்படாமல் இருப்பதே அதற்கு காரணம். தேவன் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்து அவரைத் துதித்து, அவருடைய வல்லமையை விசுவாசித்து, தங்கள் பார்வையை அவரை விட்டு விலக்காமல் இருந்தால் தொடர்ந்து அவருக்காக ஓட முடியும்.
இதை வாசிக்கும் அன்பரே, ஒரு நிமிடம் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய ஓட்டம் எப்படியிருக்கிறது? சிறுத்தையின் ஓட்டத்தை போல் வேகமாக ஆரம்பித்து, பின் வேகம் குறைந்து விட்டதா? நம் பார்வையைக் கர்த்தர் மேல் வைத்து நம்முடைய ஓட்டத்தை மீண்டும் துவக்குவோம், பொறுமையாய் தொடர்ந்து ஓடுவோம். இவ்வுலகில் நமக்கு நியமிக்கப்பட்ட காலம் வரை, பரலோகம் சேரும் வரை நிற்காமல் அவரை நோக்கி தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்போம். ஜெயத்தை சுதந்தரிப்போம்.
- M. ஸ்டாலின் ராஜா
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் சிறுவர் முகாம் நடத்தப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864