Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17-08-2021(Tamil) 17-08-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 17-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 17-08-2021

 

தப்புவிக்கும் கரம் 

 

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.” – எரேமியா 33:3

 

ரிச்சர்ட் உம்பிராண்ட் என்னும் ரோமானிய யூதர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினால் கம்யூனிச சிறையில் அடைக்கப்பட்டு 12 வருடங்கள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, அவர் கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையை மறுதலிக்குமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால் அவர் விடுதலையாகும் வரைக்கும் கர்த்தரை மறுதலிக்கவேயில்லை. அவர் தாம் எழுதிய The Orders of God என்ற புத்தகத்தில் அந்த சிறைச்சாலையின் கொடூரமான சூழ்நிலையிலும் அமைதியோடும், சமாதானத்தோடும் எப்படி தன்னால் இருக்க முடிந்தது என்பதை ஒரு சிறுகதையின் மூலம் விளக்கி எழுதியுள்ளார்.

 

ஒரு கப்பலின் மாலுமியோடு அவரது மனைவியும் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கடலில் ஏற்பட்ட புயலினால் கப்பல் அங்கும் இங்கும் அலைமோதியது. அப்போது அந்த மாலுமியின் மனைவி அவரிடம், “இந்த மாதிரி கப்பல் அலைமோதி தடுமாறிக் கொண்டிருக்கும்போது உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது?” என்று கேட்டாள். அப்போது அந்த மாலுமி அருகிலிருந்த ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார், மனைவியோ பதற்றமின்றி பார்த்தாள். அவர், “நீ இப்போது எப்படி அமைதியாகவும், பயப்படாமலும் இருக்கிறாய்” என்று கேட்டார். அதற்கு அவள் “நான் ஏன் பயப்படவேண்டும்? இந்தக் கத்தி என் அன்புக் கணவனது கரங்களில் அல்லவா இருக்கிறது? நீங்கள் என்னை நேசிக்கிறபடியால் என்னைக் குத்தமாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்” என்று கூறினாள்.

 

அப்போது அந்த மாலுமி, “அதுதான் நான் அமைதியாய் இருப்பதன் காரணமும் கூட, இந்த அலைகளும் கொந்தளிப்பும் என் அன்பு தகப்பனின் கரங்களில் இருப்பதால் அவருக்கு இந்த அலைகளும் அடங்கும் என்பதால் பயப்படாமல் இருக்கிறேன்” என்று இருக்கிறேன். 

 

அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில் புயல் வீசிக்கொண்டிருக்கிறதா? என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? எங்கு போவது என்று தெரியாமல் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? நமக்கு ஒரு தேவன் உண்டு. அவர் காற்றையும் கடலையும் அதட்டி அமைதலாயிரு என்று கட்டளையிட்டு புயலை அமைதலாக்கினார். அவர் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் புயலையும், அலைகளையும், காற்றையும் அமைதலாக்க வல்லவர். கவலைப்படாதீர்கள். சோர்ந்து போகாதிருங்கள். என்னை நோக்கிக் கூப்பிடு என்று சொன்ன தேவன் என்றும் மாறாதவராகவே இருந்து நம்மைத் தப்புவிக்க வல்லமையுள்ளவர்.

- Mrs. ஜீவா விஜய் 

 

ஜெபக்குறிப்பு:

பிசாசினால், வியாதியினால் கட்டப்பட்ட மக்களுக்கு Healing Service நடத்தப்பட, இதன் மூலம் அநேகர் அற்புத விடுதலை பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş