Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20-08-2021
Share:

By Village Missionary Movement

Friday, 20-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 20-08-2021

 

மன்னிப்பு

 

“...நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.” – மத்தேயு 6:14

 

ஸ்காட்லாந்து தேசத்தைச் சேர்ந்த சிறுவன் ராபர்ட் தன்னுடன் படிக்கும் ஜேக்கப் என்ற சிறுவனை சண்டையிட்டு கீழே தள்ளிவிட்டதில் ஜேக்கப் இறந்து போனான். இந்தக் குற்றத்திற்காக சிறுவன் ராபர்ட் ஏழு வருடம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் படிக்கும்படி சிறைக்கு அனுப்பப்பட்டான். சிறைக்கு செல்லும் முன் ஜேக்கப்பின் தாயார் ராபர்ட்டை சந்தித்து, “என் மகன் மரணத்திற்கு நீ காரணமாகிவிட்டாய், ஆனாலும் நான் உன்னை மன்னிக்கிறேன். உன்னை என் மகனைப் போலக் கவனித்துக் கொள்வேன். உன் உடன்பிறந்தவர்களும் எனக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. என் ஒரே மகன் ஜேக்கப்பை மறுபடியும் இவ்வுலகத்தில் நான் பார்க்க முடியாது. ஆகவே உன்னையும், உன்னுடன் பிறந்தவர்களையும் என் பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்கள். ராபர்ட் மற்றும் குடும்பத்தினர் ஜேக்கப்பின் தாயாருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதார்கள். 

 

பரிசுத்த வேதாகமத்தில் தன்னுடைய இளைய சகோதரனாகிய யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் அடித்து, குழியில் போட்டு, பின் அவனை எகிப்து தேசத்திற்கு அடிமையாக விற்றுப்போட்டனர். ஆனால் பின்நாட்களில் யோசேப்பு உயர்த்தப்பட்ட போது, தன் சகோதரர்களை பழிவாங்காமல், “பயப்படாதிருங்கள் நான் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்” (ஆதி. 50:21) என்று வாசிக்கிறோம். 

 

அன்பான நண்பர்களே! நம்முடைய வாழ்க்கையிலும் மற்றவர்கள் செய்த தவறால் நாம் பாதிக்கப்பட்டு, பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். நாம் அவர்களை தேவ அன்போடு மன்னித்தால் மட்டுமே அவர்கள் மீதுள்ள கசப்பு, முறுமுறுப்பு, வைராக்கியங்கள் மாறும். இது அவ்வளவு எளிதல்ல. ஆனால் நாம் அவர்களை மன்னிக்காத பட்சத்தில் தேவனும் நம்மை மன்னிக்கமாட்டார். யோசேப்பைப் போல மன்னிப்போம். தேவன் நம்மைக் கொண்டு அநேகரை போஷிப்பார், பயன்படுத்துவார். அல்லேலூயா! 

- T. சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

நம்பிக்கை T.V. நிகழ்ச்சிகளை பார்க்கும் புறஜாதி மக்களும் இயேசுவின் அன்பை அறிய ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet esbet holiganbet tambet grandpashabet betgit radissonbet