Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-09-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 25-Sep-2021

இன்றைய தியானம்(Tamil) 25-09-2021

 

என்னைப் பின்பற்றிவா

 

“…பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.” – மத்தேயு 19:21 

 

முதல் உலகப்போர் நடந்த நாட்களில் மரித்தவர்களும் காயப்பட்டவர்களும் ஏராளமான பேர். ஏறக்குறைய ஒரு கோடி வீரர்கள் முதல் உலக மகாயுத்தத்தில் மரித்திருப்பார்கள் என்றும், இரண்டு கோடி சாதாரணமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்றும் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. ஜெர்மன் தேசத்தின் சர்வாதிகாரியான ஹிட்லர் யுத்தத்திற்கு தன் படையை தலைமை தாங்கி நடத்திச் சென்றான். அவனுடைய ஒவ்வொரு பேச்சும் வாலிபர்களை ஊக்கப்படுத்துகிறதாயிருக்கும். அவன் பேசப்பேச வாலிபரின் நரம்புகள் முறுக்கேறும். இரத்தம் துடிக்கும். முடிவில் பின்பற்றுங்கள் என்று சொல்லும்போது அவர்கள் வீட்டை மறந்து, பெற்றோரை மறந்து, கண்மூடித்தனமாக அவனைப் பின்பற்றி யுத்தத்திற்கு செல்வார்கள். அதன் நிமித்தம் முதல் உலகப்போரில் அநேகர் மரித்துப் போனார்கள். 

 

இயேசு கிறிஸ்துவும் நம்மைப் பார்த்து என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று சொல்லுகிறார். அவருடைய வழி நித்திய ஜீவ வழி. அந்த வழி பரலோக ராஜ்யத்திற்கு நேராய் உங்களை கொண்டு செல்லும். அவர் தேசத்தலைவர்களைப் பார்க்கிலும் ராஜாக்களைப் பார்க்கிலும் மிகப் பெரியவர். உலகத் தலைவர்களின் வார்த்தைகள் மாறிப்போகும். ஆனால் இயேசுவின் வார்த்தை நித்தியமானவை, சத்தியமானவை. பரிசுத்த வேதாகமத்தில் இயேசுவை பின்பற்றினவர்களின் வாழ்க்கையை நாம் பார்க்கும்பொழுது ஆண்டவர் செய்த நன்மைகள் ஏராளம். 

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! யாரை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? அரசியல் தலைவர்களையா, சினிமா நடிகர்களையா, விளையாட்டு வீரர்களையா சற்று சிந்தித்துப் பாருங்கள். உலக மனிதர்கள் உங்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். ஆனால் உங்களை எப்போதும் ஏமாற்றாத ஒருவர் உண்டு. அவர்தான் இயேசு கிறிஸ்து. அவரை பின்பற்றினவர்களுக்கு ஆண்டவர் வாக்குப்பண்ணி செய்த நன்மைகளும், செய்யப் போகும் பிரதிபலன்களும் வியக்கப்படத்தக்கவைகள். அவரை பின்பற்ற உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவர் உங்களுக்கு அருமையான, மேன்மையான ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 

- P. ஸ்டீவ் மேத்யூ 

 

ஜெபக்குறிப்பு:

புதிய ஜெபக்கூடாரம் கட்டுமானப்பணிகள் 75% நிறைவடைந்து விட்டன. இன்னும் 25% பணிகளுக்கான 8 லட்சம் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet esbet sonbahis tambet grandpashabet betgit radissonbet