Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-11-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 04-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 04-11-2021

 

மரண பயம் இல்லை 

 

“...அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.” – மாற்கு 4:35

 

ஆப்கானிஸ்தான் தேசத்தை தலிபான்கள் முற்றுகையிட்டபோது, ஒவ்வொருவரும் தங்களின் குடும்பங்களுடன் அந்த நாட்டின் எல்லையை விட்டு வெளியேற பெரும்பாடுபட்டார்கள். அப்போது ஒரு பெண்ணால் சுவர் ஏற முடியவில்லை. உடனே இதைப் பார்த்த அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் கைகளைப் படிக்கட்டுகளாக வைத்தனர். அந்தக் கைகளின் மேல் ஏறி அந்தப் பெரிய சுவரைக் கடந்து அந்த நாட்டின் எல்லையைத் தாண்டி கடந்து சென்றார். அந்தப் பெண் தான் உயிர் தப்பிக்க உதவி செய்த ராணுவத்தினருக்கு நன்றி சொல்லிக் கொண்டே ஒரு புதிய கரையை அல்லது எல்லையை நோக்கி பயணம் செய்தார்.  

 

பரிசுத்த வேதாகமத்தில் மாற்கு 4-ம் அதிகாரம் 35-ம் வசனத்தில் பார்த்தால் இயேசு தமது சீஷர்களை அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என அழைக்கிறார். ஆனால் இடையிலோ பலத்த சுழல்காற்று அடிக்க, அலைகள் எழும்பி படகு மூழ்கிவிடும் என்ற நிலை. மிகவும் ஆபத்தான ஒரு நேரம்! இயேசுவை நம்பி அக்கரைக்குப் போக ஏறினோம், ஆனால் இப்பொழுதோ பாதி வழியிலேயே மூழ்கி மரித்துவிடுவோமோ என்கிற பயம் வந்ததால் இயேசுவை நோக்கி சத்தமிடுகிறார்கள். உடனே இயேசு எழுந்து, காற்றை அதட்டினார். மிகுந்த அமைதல் உண்டானது. பின்பு 5-ம் அதிகாரம் முதல் வசனத்தில் பார்த்தால் “அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்” என வாசிக்கிறோம். 

 

நண்பர்களே! இந்த கொள்ளை நோயின் காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் எழும் கேள்வி, “நான் அக்கரைக்கு போய்விடுவேனா?” என்பதுதான். முதல் அலை, இரண்டாம் அலை என்றார்கள், இப்போது மூன்றாவது அலை வரப்போகிறது என்கிறார்கள். இன்னும் எத்தனை அலையோ? நாம் அறிவதற்கில்லை. ஆனால் எந்த அலை வந்தாலும் அதை அதட்டி நம்மை நமது வாழ்வின் அக்கரையில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு இயேசு உண்டு. எனவே இந்த நாட்களைப் பார்த்து நாம் பயப்படவேண்டாம். இயேசுவையே சார்ந்து, விசுவாசத்தோடு இருப்போமென்றால், நம்மையும் நமது குடும்பம் மற்றும் நமது நாடு என எல்லாவற்றையும் பத்திரமாக அக்கரையில் கொண்டு போய் சேர்ப்பார்! “அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்” என்ற தேவனுடைய வார்த்தையை நினவுகூருவோம். நிச்சயமாகவே இந்தக் கொரோனா அலையின் நாட்களை கடந்து இயல்பு வாழ்க்கை என்னும் அக்கரைக்கு செல்வது உறுதி! கொண்டு சேர்ப்பவர் இயேசு! ஆமென்! 

- T. சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

சகோ. டேவிட் கணேசன் அவர்கள் சமூக வலைதளங்களில் தேவ வார்த்தைகளை அறிவிக்கும்போது கேட்கும் ஒவ்வொருவரும் விடுதலையை பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino