Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-11-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 11-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 11-11-2021

 

உதவும் கரங்கள் 

 

“இங்கே ஒரு பையன் இருக்கிறான்,…” – யோவான் 6:9

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை என்ற ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 17) மிகவும் ஏழை குடும்பம். உடைந்த வீடு, சரியான வருமானம் இல்லை, அம்மாவும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். ஜெயலட்சுமி நன்றாகப் படித்து தனியார் நிறுவனம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். செல்ல பணம் இல்லாததால் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தன. ஆனால் இந்த சிறுமியோ தனக்கு கிடைத்த உதவியோடு, தனது கிராமத்தில் ஒரு வீட்டில் கூட கழிப்பறை இல்லை என்று அத்தொண்டு நிறுவனத்திடம் பேசினாள். இதை அறிந்த தொண்டு நிறுவனம் பலரின் உதவியோடு 126 கழிப்பறைகள் கட்டித் தந்தது. அந்தக் கிராமத்தின் நலனுக்காக நிற்கிறாள். இந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவந்து அநேகருக்கு புதிய ஊக்கத்தைக் கொடுத்தது. 

 

ஒருமுறை இயேசு மலைப்பகுதியில் தனது பிரசங்கத்தை முடித்தபின்பு கூடிவந்த மக்களுக்கு போஜனம் கொடுக்கும்படி தனது சீஷர்களுக்குக் கூறினார். அப்போது ஒரு சீஷர் “இங்கே ஒரு பையன் இருக்கிறான். அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு” எனக் கூறினார். பெயர் சொல்லப்படாத அந்த சிறுவன் தனக்கென்று சாப்பிட வைத்திருந்தான். அப்போது அங்கே நடக்கிற காரியத்தைப் பார்க்கிறான். அவனோ அதை மறைத்து வைத்திருக்க முடியும். ஆனால் அதைக் கொடுக்க ஆயத்தமானான்! அங்கே அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் இயேசு அவனுடைய அப்பங்களையும், மீன்களையும் எடுத்து ஆசீர்வதித்து, ஏறக்குறைய ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு பங்கிட்டுக் கொடுத்தார். மேலும் மீதியானதை பன்னிரண்டு கூடைகளில் எடுத்தார்கள் என்றும் வாசிக்கிறோம். அந்த இடத்தில் அந்த மக்களுக்காக நின்றான் அச்சிறுவன். பெயர் சொல்லப்படாவிட்டாலும் அந்த சிறுவன் இன்றைக்கு வாழ்கின்ற நம்மெல்லாருக்கும் ஒரு நல்ல முன்மாதிரி! 

 

நண்பர்களே! இன்றைக்கு நாம் இப்படிப்பட்ட ஒரு சாட்சியைப் பெற முடியுமா? “இங்கே ஒரு பையன் இருக்கிறான்” என்று நம்மைக் குறித்து சொல்ல முடியுமா? இந்த கொள்ளை நோயின் நாட்களில் நாம் மற்றவர்களுக்காக நமது திறமை, மூளை, வாய்ப்பு, படிப்பு, பணம், சரீர உழைப்பு என ஏதாகிலும் ஒன்றை கொடுக்க வேண்டும். நமது ஊர் ஜனங்கள், சபை மக்கள், நண்பர்கள் என அனைவரும் இங்கே ஒருவன் இருக்கிறான் என்று சொல்ல வேண்டும். விசேஷமாக இளம் வாலிபர்கள் மேற்கண்ட இரு உதாரணங்களையும் கவனியுங்கள்! இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ உங்களை அர்ப்பணியுங்கள். 

- T. சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

ஊழியர்களுக்காக வெளியிடும் “கழுதைகள் கையேடு” மூலம் ஊழியர்கள் புதிய அபிஷேகத்தை பெற்று வைராக்கியமாய் செயல்பட ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet