Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  13-01-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 13-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  13-01-2021

Update ஆகிவிட்டீர்களா? 

“...நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.” – ரோமர் 16:19

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் “ட்ரெண்டிங்” என்ற வார்த்தை மிகவும் ட்ரெண்டாகிவிட்டது. ஒரு முறை நான் கொடைக்கானல் சென்றிருந்தேன். அங்கு ஒருவர் ஐஸ்கட்டிகள் நிறைந்த நீர்வாளியை எடுத்து தன் தலையில் ஊற்றிக்கொண்டு கொடைக்கானல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். அதனை அவரின் நண்பர்கள் உற்சாகப்படுத்தி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தபோது அது “ஐஸ் பக்கெட் சேலஞ்ச்” (Ice bucket Challenge) எனவும் தற்போது இப்படி வித்தியாசமாகச் செய்வதுதான் ட்ரெண்ட் என்றும் கூறிவிட்டு “இது கூட தெரியாதா” என்பது போல ஏளனப்பார்வை வீசினார். 

ஆனால் உண்மையென்னவென்றால்  Ice bucket Challenge என்பது ஒருவித நரம்பு வியாதியை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்நோயினால் பாதிக்கப்படுவோர்க்கு நன்கொடை வசூலிப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பாக கையாளப்பட்ட ஒன்று. ஆனால் இது சமீபகாலமாக ஜாலிக்கான ஒரு விளையாட்டாக ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. ஒரு விஷயத்தை ஏன் எதற்கு செய்கிறோம் என்று கூட யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். அவர்களின் பார்வைக்கு அவர்கள் அனைத்தும் அறிந்து updated ஆக இருக்கும் ஞானிகள். அதை அறியாதவர்கள் மூடர். “இது கூட தெரியாதா?” என்ற வார்த்தை நம்மை பல நேரங்களில் வருத்தப்படுத்தக்கூடும். ஆனால் என் அன்பு இளம் வாலிப தம்பி-தங்கைகளே, நாம் உலகத்தோடு ஒத்து வாழ அழைக்கப்படவில்லை, மாறாக நன்மைக்கு ஞானிகளும், தீமைக்கு பேதைகளுமாய் இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது. இருப்பினும் தேவபிள்ளைகளாகிய நீங்கள் சிலநேரங்களிலே அநேக காரியங்கள் குறித்து நாம் updateஆக இல்லையோ என்று கவலைப்படலாம். கவலை வேண்டாம். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு வேதத்தை இரவும் பகலும் தியானிக்கிற நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் நிகழ்காலத்தில் நடப்பது மட்டுமல்ல உலகத்தோற்றமுதல் முடிவு வரை என்ன நடக்கப்போகிறது என அறிந்த மெய்ஞானி நீங்கள்தான். 

இவ்வுலகம் தீமையை தீவிரமாய் பின்தொடர்கிறது. “மார்டன்”, ஸ்டைல்”, “ட்ரெண்ட்” என்று தங்கள் நடை, உடை, பேச்சு என அனைத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது. பாவமான காரியமெல்லாம் இப்போது fashion ஆகிவிட்டது. நாமோ இந்த உலகத்தின் போக்கில் அல்ல. நன்மையான, தேவ பக்தியுள்ள, தேவனை பிரியப்படுத்தும் காரியங்களில் ஞானிகளாவோம்.   இந்த 2021ம் ஆண்டில் அழிந்து போகும் உலகிற்கு அல்ல என்றுமே updatedஆக இருக்கும் அழியா தேவ வார்த்தைக்கு முன்னுரிமை தருவோம். 
-    Mrs. ஜெஸி அலெக்ஸ் 

ஜெபக்குறிப்பு:
ஒடிஸாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் உள்ள விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet