Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26-12-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 26-Dec-2021

இன்றைய தியானம்(Tamil) 26-12-2021 (Kids Special)

 

பணம் அது தூங்காவனம்

 

“...உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” - 2 கொரி. 9:7  

 

Hello குட்டி செல்லங்களே! நவம்பர் 1-ஆம் தேதி school-க்கு போயிட்டீங்கள்ல. பூட்டப்பட்ட வாசல்களையெல்லாம் இயேசப்பா உங்களுக்காக திறந்து அற்புதங்களை செய்தாங்க பார்த்தியா? வியாதியெல்லாம் குறைந்து, உங்களுக்கும் நல்ல சுகத்தை கொடுத்த இயேசப்பாவுக்கு நன்றி சொன்னீங்களா? இப்பவே கைகூப்பி Jesusக்கு நன்றி சொல்லுங்க. Super…Daily schoolக்கு போகும்போது prayer பண்ண மறக்கவே கூடாது. ok. கதை சொல்லட்டுமா? 

 

ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவருக்கு நிறைய சொத்துக்கள், தோட்டம், வேலைக்காரர்கள் எல்லாம் இருந்தாங்க. எல்லா விதத்திலும் பணம் சேர்ந்துக்கிட்டே இருந்தது. அந்த பணத்தையெல்லாம் என்ன செய்யணும்னே தெரியலை. தானும் தன் குடும்பமும் நல்ல இருந்தா போதும்னு நினைப்பார் அந்த பணக்காரர். யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கவேமாட்டார். வீட்டில் நிறைய பணம் இருந்தா திருடர்கள் வந்து திருடி விடுவார்களே என்று நினைத்து, எல்லா பணத்தையும் ஒரு பெட்டிக்குள் வைத்து அடுக்கி பூட்டிவிட்டார். யாருக்கும் தெரியாமல் தோட்டத்திற்கு சென்று ஒரு மரத்துக்கடியில் குழியை தோண்டி கீழே கல்லெல்லாம் அடுக்கி வைத்து அதுக்கு மேலே பெட்டியை வைத்து மண்ணை போட்டு மறைத்து வைத்துவிட்டார். அப்பாடா யாரும் பணத்தை எடுக்க முடியாது என்று சந்தோஷப்பட்டார். மழை பெய்தால், ஐயோ மழை தண்ணீர் பெட்டிக்குள் போய் பணம் நனைந்து விடுமோ என்று நினைத்து தூங்கவே மாட்டார். காலையில் எழுந்தவுடன் மண்ணை தோண்டி பெட்டியை திறந்து பார்ப்பார். பணம் பத்திரமாய் இருப்பதைக் கண்டு நிம்மதியாக இருப்பார். இதை கவனித்துக் கொண்டிருந்த வேலைக்காரன் யாருக்கும் தெரியாமல் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு எப்பொழுதும்போல வைத்து விட்டான். ஒரு நாள் பணக்காரர் பெட்டியை திறந்து பார்த்தார். பணம் காணாமல் போனதை நினைத்து சத்தம்போட்டு அழுதுவிட்டார். ஐய்யய்யோ! இந்த பணக்காரர் எதுக்கு அழுகிறார் என்று எல்லாரும் ஓடி வந்தார்கள். விஷயத்தை கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் யாராவது பணத்தை மண்ணுக்கடியில் வைப்பாங்களா? யாருக்கும் பிரயோஜனப்படாத பணம் எதுக்கு? இப்படி பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டு உணர்வடைந்த பணக்காரர் அன்று முதல் பிறருக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். 

 

அன்பான தம்பி-தங்கச்சி, ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிற பணம், வசதி, ஆசீர்வாதங்கள் எல்லாம் நாம் மட்டும் அனுபவிக்க அல்ல, தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அந்த பணக்காரரைப் போல மற்றவர்களுக்கு கொடுக்க மனதில்லாமல் இருக்கக்கூடாது. வருகிற புதிய ஆண்டில், “தேவையுள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்று தீர்மானமெடு” Ok. 

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet tambet grandpashabet radissonbet palacebet betbey cratosroyalbet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş https://tr.holiganbet-30temmuz.art/