Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-01-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 04-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 04-01-2022

 

துணையாளர்

 

“...பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.” -ஏசாயா 41:13

 

ஜான் என்ற சிறுவன் தன் வீட்டின் மேல் மாடியில் ஏறி வேடிக்கை பார்த்து விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென கீழிருந்து அவனது தகப்பன் ஜான் குதித்து விடு என்றார். உடனே ஜான் குதித்து விட்டான். தகப்பன் பெரிய நெட் வைத்து பிடித்தார். ஏனெனில் மின் கசிவினால் மின் கம்பத்தில் தீ பற்றியது. அவனை காப்பாற்றவே தகப்பன் அவ்வாறு கூறினார். மக்கள் எப்படி குதித்தாய் என ஜானிடம் கேட்டனர் “குதித்து விடு” என கேட்டது என் தகப்பனின் குரல் அல்லவா? என்றான். “என் தகப்பன் என்னை பாதுகாப்பவர். தவறுதலாய் எதுவும் சொல்லமாட்டார்” என்றான். 

 

இதேபோல் நாமும் வேதத்தை வாசிக்கும்போது தேவன் நம்மிடம் பேசும் காரியங்களை அப்படியே நம்பி விசுவாசிக்கும்போது, நம் வாழ்வில் ஆசீர்வாதம் உண்டாகும். பாவத்திலிருந்தும் ஆபத்திலிருந்தும் காக்கப்பட முடியும். இன்றும் கூட நம் தேவன் நம் வலது கையைப் பிடித்து நான் உனக்குத் துணை நிற்கிறேன் எனக் கூறுகிறார். இந்த ஆண்டு முழுவதும் நம் தேவன் நம் துணையாளராக இருந்தால் எவ்வளவு சந்தோஷம். இந்த ஆண்டு முழுவதும் நம் தேவனை துணையாளராக நம்பி விசுவாசித்தால் அவர் எல்லா காரியங்களிலும் துணையாக இருந்து நடத்துவார். மனிதரை நம்பினால் சில காரியங்களை அவர்களால் சமாளிக்க முடியாமல் போகலாம். ஆனால் நம் தேவனை துணையாகக் கொண்டால் அவர் சர்வ வல்லவர் எல்லாவற்றையும் எளிதாக, நன்மையாக செய்து முடிப்பார். தேவன் நம் துணையாக இருந்தால் எவ்வளவு பெரிய பலம்!  

 

பிரியமானவர்களே! இந்த ஆண்டை எப்படி சந்திப்பது? இந்த ஆண்டும் இதே பெலவீனத்தோடுதான் இருக்க வேண்டுமா? இந்த சூழ்நிலை மாறாதா? என்ற கேள்விகளோடு இருக்கிறீர்களா? உங்களைப் பார்த்து தேவன், “நான் உன் வலது கையைப்பிடித்து, பயப்படாதே நான் உனக்குத் துணை நிற்கிறேன்” என்று சொல்கிறார். அவர் உங்களோடு துணையாளராக இருந்தால் இந்த சூழ்நிலை, பிரச்சனை மட்டுமல்ல எந்த சூழ்நிலையையும், எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும். ஏனெனில் நம் தேவன் பெரியவர் அவர் முன் நம் பிரச்சனைகள் சிறிதாக தோன்றும். அவர் சர்வ வல்லவர் அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ஜெபித்து நம் வாழ்வில் ஜெயம் பெறுவோம். அல்லேலூயா! 

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு:

இந்த ஆண்டின் தரிசனத்தின்படி ஊழிய எல்லையெங்கும் பரிசுத்தம் காணப்பட ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş