Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09-01-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 09-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 09-01-2022 (Kids Special)

 

புரட்டப்பட்ட கல் 

 

“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” - மத்தேயு 5:7 

 

ஒரு ராஜா தன் மக்களைப் பற்றி அறிய விரும்பி, மாறுவேடமிட்டு ஒரு பெரிய கல்லை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாதையில் வைத்தார். அதனடியில் நூறு வெள்ளிக்காசும் ஒரு கடிதமும் வைத்தார். பின்பு யாருக்கும் தெரியாமல் என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டிருந்தார். அந்த பாதையில் எல்லோரும் நடந்து சென்றனர். ராஜீவுக்கு தெருவில் இடைஞ்சலாய் இருந்த கல்லைப் பார்த்ததும் கோபம் வந்தது. “வரி வாங்குகிற மந்திரிமார் இதையெல்லாம் பார்க்கிறதில்லை, வழியில் இவ்வளவு பெரிய கல் இருந்தா மக்கள் இந்த பாதையில் எப்படிபோறது, வாரது? ம்...ம்.. எல்லாம் அநியாயம்தான் நடக்கிறது” என புலம்பி சென்றான். வேலன் அந்த பாதையில் வந்தான். அவசரமாக சென்ற அவனுடைய காலில் பலமாய் கல் இடித்துவிட்டது. உடனே அவனுக்கு கோபம். கல்லை உதைத்து, “என்னை விழ தட்டி விட்டாயே. எவன் அறிவில்லாம இந்த கல்லை இங்க கொண்டு வந்து போட்டிருக்கான் புத்தியில்லாதவன்” என்று கோபமாக திட்டி கல்லை மிதித்துச் சென்றான். மணி வந்தான். அவனும் கல்லைப் பார்க்காமல் தட்டி விழுந்து விட்டான். ஆனால் அவன் எழுந்ததும், “இந்த மாதிரி எத்தனை பேர் விழுந்தார்களோ? தெரியவில்லை. எவனோ இங்க போய் கல்லை போட்டிருக்கான்” எனச் சொல்லிவிட்டு, “இனி யாரும் விழக்கூடாது. நான் இதனை புரட்டி ஓரமாக போடுகிறேன்” என சொல்லி கல்லை கஷ்டப்பட்டு புரட்டி ஓரமாக தள்ளினான். தள்ளினதும் பார்த்தா ஒரு கடிதமும் பளபளவென்று நூறு வெள்ளிக்காசும் இருந்தது. கடிதத்தில் கல்லை புரட்டும் நபருக்கு இந்த வெள்ளிக்காசுகள் சொந்தம் என எழுதப்பட்டிருந்தது. மணி எடுத்ததைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜா மணியைப் பாராட்டி தன் திட்டத்தை சொன்னார். மணி அந்த நூறு வெள்ளிக்காசுகளை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாகச் சென்றான். 

 

அன்பு தம்பி-தங்கச்சி, ராஜீ, வேலன் போல கோபப்பட்டால் நாம் எதையும் செய்ய முடியாது. வலிதான் கிடைக்கும் மற்றவர்கள் இடறிவிடக் கூடாதே என மணி இரக்கப்பட்டு கல்லைப் புரட்டியது போல் இரக்க மனதுடன் செயல்பட்டால் நாமும் இரக்கம் பெற முடியும். கோபம் இல்லாமல் சாந்தமாக இருந்தால் ஞானமாக செயல்பட முடியும். உயர்வைப் பெற முடியும். 

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis wbahis grandpashabet betgit betsalvador matbet meritking