Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-01-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 18-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 18-01-2022

 

தேவனால் கனம் பெற 

 

“...உங்கள் கிரியையையும்... தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.” - எபிரெயர் 6:10 

 

உலகத்தாரால் கனம் பெற்றவர்களின் பட்டியலில் அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்றோர்தான் இடம் பெறமுடியும். எளிய வேலை செய்பவர்களின் பெயர்கள் அப்பட்டியலில் இடம் பெறவே முடியாது. ஆனால் எளிய வேலை செய்பவர்கள் கூட கர்த்தருக்காக செயல்படும்போது, ராஜாதி ராஜாவாகிய தேவனால் கனம் பெறுவார்கள். மேற்கண்ட வேதபகுதியில் வரும் நாகமான் சீரிய ராஜாவின் படைத்தலைவன். ஆனால் அவன் வாழ்க்கையையே சீர்குலைக்கும் குஷ்டரோகம் அவனுக்கு இருந்தது. அவன் குஷ்டரோகத்திலிருந்து சுகம் பெற காரணமாக இருந்தது இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவரப்பட்டு, அவனது மனைவிக்கு பணிவிடைக்காரியாக இருந்த சிறுபெண் தான். 

 

எலிசா தீர்க்கதரிசி அவனை யோர்தான் நதியில் 7 முறை ஸ்நானம் பண்ணும்படி ஆலோசனை கூறியபோது நாகமான் கடுங்கோபங்கொண்டான். அப்பொழுது அவன் ஊழியக்காரர், எலிசாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியும்படி அவனை வற்புறுத்தினார்கள். அவன் அவர்களுக்கு செவிகொடுத்து, யோர்தானில் ஸ்நானம் பண்ணியபோது சுகம் பெற்றான். இஸ்ரவேல் ராஜாவோ, எலிசாவோ இந்த சாதனையைச் செய்யவில்லை. எளிய ஆலோசனையைக் கூறிய சிறுபெண்ணும், வேலைக்காரர்களுமே இந்த அற்புதம் நடக்க காரணமாயினர். எளிய வேலை செய்தவர்கள் கர்த்தருக்காக செயல்பட்டதால் சம்பாதித்தது என்ன? “இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்று அறிந்திருக்கிறேன்” என்று நாகமான் அறிக்கை பண்ணினான்.   

 

தேவனால் வேறு பிரிக்கப்பட்டவர்களே! நீங்கள் ஒருவேளை உலக அளவில் மிகவும் சாதாரண வேலை செய்பவர்களாகவும் பணம் பதவி அந்தஸ்து போன்றவைகளில் நீங்கள் மேன்மை பெறாதவர்களாய் இருக்கலாம். படிப்பு, அறிவு, திறமை இவைகளும் இல்லாமல் இருக்கலாம் கவலைப்படாதீர்கள். உங்களை தேவன் வைத்திருக்கும் வேலை ஸ்தலங்களில் ஆண்டவரை மகிமைப்படுத்திக் கொண்டே இருங்கள். ஆண்டவரைக் குறித்து மேன்மை பாராட்டுங்கள். உங்கள் வேலை ஸ்தலங்களில் வேலை செய்யும் எல்லாருடைய நலனுக்காகவும் இரட்சிப்புக்காகவும் ஜெபம் செய்யுங்கள். அவர்கள் தேவனை அறியும்படியான முயற்சியையும் எடுங்கள். இப்படிச் செய்தால் பரலோகத்தின் பார்வை உங்களைத்தான் Heroவாக பார்க்கும். உங்களால் பரலோகமும் சந்தோஷப்படும். ஆமென். 

- Mrs. கீதா ரிச்சர்ட் 

 

ஜெபக்குறிப்பு:

வேதாகமக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் தேவனுடைய கரத்தில் கடைசிக்கால எழுப்புதலின் கருவிகளாய் பயன்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet instagram unban service tiktok unban instagram unban x unban twitter unban palacebet