Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  17-01-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 17-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  17-01-2021 (Kids Special)

தியாகத்தின் உருவம்

“உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக...” – எபேசியர் 6:3 

அன்பு பிள்ளைகளே! Gift என்றால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குந்தானே. ஆமாம், நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஆண்டவர் தந்த Gift. அதனாலே அவங்களுக்கு நீங்கன்னா ரொம்ப உயிர். அதே சமயம் உங்க பெற்றோரை நீங்களா தெரிந்தெடுக்கவே முடியாது. அவர்களும் ஆண்டவர் உங்களுக்கென்று தெரிந்தெடுத்து கொடுத்த வெகுமதி. So, அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை கனம் பண்ணும்போது உங்கள் வாழ்வு ஆசீர்வதிக்கப்படும். Ok, கதைக்குப் போவோமா! 

விக்னேஷ் அழகான பையன். இரண்டு கண்களும் இரண்டு விளக்குகள் போல துறுதுறுவென்று இருக்கும். நல்ல அறிவாளி. ஆசிரியர் மற்றும் உடன்பயிலும் மாணவர்கள் எல்லோருக்கும் அவனை ரொம்பப்பிடிக்கும். ஆனால் அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை. அவனுடைய தாயாருக்கு ஒரு கண்தான் இருக்கும். ஆகவே அவர்களது முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பிடிக்காது. மிகவும் வெறுத்தான். அவர்கள் அன்புடன் செய்யும் சாப்பாடு, உதவிகள் எதுவும் அவனை திருப்திப்படுத்தவேயில்லை. மதிய உணவு கொடுக்கக்கூட பள்ளிக்கு வரவே கூடாது என்று கூறுவான். தாயும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள். அனுதினமும் அவனுக்காக ஆண்டவரிடம் கண்ணீருடன் ஜெபித்தார்கள். 10ம் வகுப்பிலும் 12ம் வகுப்பிலும் முதல் மார்க் எடுத்தான். அதிலும் தன் தாயை கனம் பண்ண விரும்பவேயில்லை. ஆசிரியருடனே கூட Photoவும் எடுத்துக்கொண்டான். இதையெல்லாம் பெரிதாய் எண்ணி கவலைப்படுவதில்லை. அவன் உயர்கல்விக்காக வேண்டிய உதவியை தேவன் மூலம் பெற்றுக்கொடுத்தார்கள். 

ஆண்டவர் அவன் உள்ளத்தில் இடைபடத்துவங்கினார். ஒருநாள் தாயார் இல்லாதபோது அவர்களின் பெட்டியைத் திறந்து அதிலுள்ள ஒவ்வொன்றையும் பார்த்தான். அதில் ஒரு செய்தி அவனை அதிர்ச்சியடையச்செய்தது. அவனுடைய தாய், தன் ஒரு கண்ணை மகனுக்கு தானமாக கொடுத்த மருத்துவ சான்றிதழை வாசித்தான். திடுக்கிட்டான், அழுதான். ஆண்டவரிடம் மன்னிப்புப் பெற்றான். அன்றிலிருந்து தேவன் தனக்குக்கொடுத்த விசேஷித்த பரிசான தாயாரை மிகவும் நேசிக்க ஆரம்பித்தான். இவ்வளவு அன்புக்கு ஈடாக நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என மனமுடைந்தான். தன் தாயாரை இறுதிவரை ஒரு குறையுமின்றி தன்னுடன் வைத்து தன் அன்பை வெளிப்படுத்தினான். 

அன்பு தம்பி தங்கச்சி, உனக்காகவும் உன் அம்மா செய்திருக்கிற தியாகம் அதிகம்! உன்னை வயிற்றில் சுமந்த நாட்கள், உன் குழந்தைப் பருவம், நீ உடல்நிலை சரியில்லாமல் பெலவீனப்பட்ட நாட்கள்.... என ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் உனக்காக தன் சுகத்தை, தூக்கத்தை எல்லாம் இழந்திருக்கிறார்கள். ஆகவே எந்த விதத்திலும் அவர்களை அற்பமாய் எண்ணக்கூடாது. சுவையான மதிய உணவு சமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி சொல்லலாம். அம்மா செய்யும் உதவிகளுக்கெல்லாம் நன்றி சொல்லலாம். பெற்றோரை கனப்படுத்தினால் இயேசப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். Ok குட்டி! 
-    Sis. தெபோராள்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet