Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-01-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 30-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 30-01-2022 (Kids Special)

 

யார் இவன்? 

 

“அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.” – சங்கீதம் 113:7

 

பர்னபாட் என்ற குட்டித் தம்பி ரொம்ப துருதுருவென இருப்பான். இவன் உடன்பிறந்தவர்கள் 13 பேர். சிரிப்பு, சண்டை என வீடே அமர்க்களமாகத்தான் இருக்கும். அப்பா கார்லோ வேலைக்கு போகும்போதெல்லாம் நானும் வாரேன் என்று அடம் பிடிப்பான் இந்த பர்னபாட். அப்பாவும் ஒருநாள் அவனை office-க்கு அழைத்துச் சென்றார். தாமதமாக வந்ததால் Manager கூப்பிட்டுத் திட்டினார். அப்பா திட்டு வாங்கியது பர்னபாட்-க்கு வருத்தமாக இருந்தாலும், மேனேஜர் இவனுக்குப் பெரிய ஆளாகத் தெரிந்தார். உடனே நல்லா படித்து இவரைப் போல Manager-ராகணும் என்று நினைத்தான். உங்களுக்கும் நிறைய கனவுகள் இருக்கா? Doctor, Engineer, Nurse, Army இப்படி ஆக வேண்டுமென்று ஆசைப்படுவீங்கதானே! 

 

ஒருநாள் அந்த Manager வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். கார்லோ குடும்பத்தை அழைத்திருந்ததால் எல்லாரும் சென்றார்கள். இந்த பர்னபாட் மட்டும் Manager எங்கே என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற பிள்ளைகளெல்லாம் ஜாலியா சாப்பிட, விளையாட என்று enjoy பண்ணினாங்க. அந்த Manager-ஐ பார்த்ததிலிருந்து அவரைப் போலவே மாறணும், அவர்தான் எனக்கு Hero என்று நினைத்தான். திடீரென்று Manager-ஐ ஒருவர் திட்டுவதைப் பார்த்து திடுக்கிட்டான். அப்போ இவரை விட பெரிய ஆளு இருக்கிறாரா? என நினைத்து அப்பாவிடம் போய் கேட்டான். ஆமாப்பா அவரை விட பெரியவர் owner என்று சொன்னதும் நாட்டிலேயே உயர்ந்த பதவி எது? என்று கேட்டான். பர்னபாட் அப்பாவும் சிரித்துக் கொண்டே அரசர் பதவிதான் என்று சொன்னார். அன்றைய நாளிலிருந்து அரசராக வேண்டுமென்று நினைத்தான். பள்ளிப் படிப்பை முடித்து ராணுவத்தில் சேர்ந்தான். அவன் கடின உழைப்பு, முயற்சியினால் சீக்கிரம் படைத்தளபதி ஆனான். சரியான சூழ்நிலை வந்தது. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி France நாட்டின் அரசனாக மாறினான். அரச குடும்பத்தில் பிறக்காத யாரும் அரசராக முடியாது. ஆனால் அந்த சரித்திரத்தை மாற்றி எழுதினார் பர்னபாட். சாதாரண குடிமகனும் அரசராக முடியும் என நிருபித்துக் காட்டினார். இவர் யார் தெரியுமா? மாவீரன் நெப்போலியன் பர்னபாட். முடியாது என்கிற வார்த்தை என் அகராதியில் இல்லை என்று சொன்னார். சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும்.... நம்பிக்கையோடு முயற்சித்து தன் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார். 

 

அருமையான தம்பி-தங்காய், இந்த புதிய ஆண்டிலும் என்னால் முடியாது, இது சாத்தியமில்லை, இது நடக்கவே நடக்காது என்று நினைக்கக்கூடாது. நம்மை படைத்த தேவன் சொல்கிறார் என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ? அவரால் எல்லாம் கூடும். உன் ஆசைகள், ஏக்கங்கள் எல்லாம் அவர் நிறைவேற்றுவார். இயேசுவை நம்பி உன் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வாயானால்... வெற்றி உன் கையில்! 

- Mrs. ஜோதி ஆனந்த்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet