Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Tuesday, 01-Feb-2022

இன்றைய தியானம்(Tamil) 02-02-2022 (God’s creation’s special)

 

புதையல்

 

“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது...” - 2 தீமோத்தேயு 3:16    

 

வேத புத்தகமாகிய நான் வெறும் புத்தகமல்ல... அற்புதமான புதையல் என்னை மூன்று மொழிகளில் எழுதினார்கள். சுமார் 1600 வருடங்களாக என்னை எழுதினார்கள். சுமார் 40 நபர்களால் எழுதப்பட்டேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்ததுகூட கிடையாது. படிக்காதவர்கள், மீனவர்கள், மேய்ப்பர்கள், மருத்துவர் என இப்படிப்பட்டவர்கள்தான் என்னை எழுதினார்கள். அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு என்னை எழுதினார்கள். உலகிலேயே அதிகமாய் அச்சடிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படும் புத்தகமும், அதிகமாக வாசிக்கப்படும் புத்தகமும் நானே! என்னை முழுமையாக வாசிக்க 72 மணி நேரம்தான் ஆகும். உலகத்திலேயே அதிகமாக விற்பனையாவதும் நான்தான்! சுமார் 2000 வருடங்களாக என்னை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினர். என்னை எரித்தனர், கிழித்தனர். ஆனால் இப்போது 1200க்கும் மேற்பட்ட மொழிகளில் அச்சடிக்கப்பட்டு அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கிறேன்.

 

உங்களுக்குத் தெரியுமா? என்னை நேசித்து, வாசித்து அதன்படி நடக்கிறவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஆத்துமா உயிர்ப்பிக்கப்படும் (சங் 19:7), சமாதானம் கிடைக்கும்(119:165), மனமகிழ்ச்சி உண்டாகும்( 119: 77), நித்திய ஜீவன் கிடைக்கும் ( யோவான் 5:39) இப்படி பல ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உண்டாகும்.

 

பிரியமானவர்களே! அநேகருடைய தியாகத்தினால் நான் உங்களுடைய கைகளில் கிடைத்திருக்கிறேன். என்னைத் தொட்டால் வெறும் காகிதம், அதை படித்தால் அதுவே உனக்கு ஆயுதம். என்னை நீ தூக்கி சுமந்தால், நான் உன்னை சுமப்பேன். எந்த புத்தகத்தின் ஆக்கியோனும் உடன் வருவதில்லை. ஆனால் என்னை எழுதியவர் என்னோடே இருக்கிறார். சுருங்க சொன்னால் நான் ஒரு பரலோக பொக்கிஷம். வேத புத்தகமாகிய என்னை தலையணையின் அடியில் வைத்து தூங்குவதாலோ, என்னை தொட்டு வணங்குவதாலோ, தேவனுடைய வல்லமை உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. மாறாக, எனக்குள் இருக்கும் தேவனுடைய வசனங்களை வாசித்து, தியானித்து, நேசித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகிறவர்களுக்கு நிச்சயம் தேவனுடைய வல்லமை கிடைக்கும். எனவே என்னை ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் எடுக்காமல் அனுதினமும் எடுத்து என்னை வாசிக்க, தியானிக்க உங்களை ஒப்புக்கொடுங்கள். நிச்சயம் கர்த்தர் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார்!. ஆமென்.

- P. சிவா

 

ஜெபக்குறிப்பு: 

பரிசுத்தத்தில் வளரும் ஆண்டான இவ்வாண்டில் நாம் வழிநடத்தும் வாலிபர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்தத்தில் வளர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet instagram unban service tiktok unban instagram unban x unban twitter unban palacebet