By Village Missionary Movement
Friday, 25-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 25-02-2022 (God’s creation’s special)
கல்லறையின் கதறல்
“...அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்” - மத்தேயு 23:27
அரசன் ஆனாலும் சரி, ஆண்டி ஆனாலும் சரி, கடைசில உயிர் போகும்போது பாட்டு பாடி என்கிட்டதான் கொண்டு வந்தாகணும். நான்தான் அவர்களது கடைசி இருப்பிடம். வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவன் தனிமையில் என்னிடம் வர மிகவும் பயப்படுவான். ஆனால் ஒருவன் இராப்பகலாக எங்களோடே வாழ்ந்து வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தான். கற்களை வைத்து தன் உடம்பை ரணப்படுத்துவான். அவனுக்குள் லேகியோன் பிசாசுகள் குடிகொண்டிருந்தன. ஆனால் ஒருநாள் இயேசு அவனை சந்தித்தார். அவனுக்குள் தங்கியிருந்த பேய் பிசாசுகளை எல்லாம் ஓட ஓட விரட்டிவிட்டார். அவன் தெளிந்த புத்தி உள்ளவனாய், ஆடை அணிந்தவனாய் தேவனுக்கென்று சாட்சியாக வாழ ஆரம்பித்தான். தெக்கப்போலி நாடெங்கிலும் இயேசுவைக் குறித்து பிரசித்தம் பண்ணத் தொடங்கினான்.
இந்தக் கல்லறை மனிதனின் உடலும் அசுத்தமாக இருந்தது. இப்பொழுதோ அனைத்தும் சுத்தமானது. ஆனால் இயேசு ஒரு சிலரை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்று கூறுகிறார். ஏன் அப்படி கூறுகிறார்? என்னிடத்தில் பிணங்களின் துர்வாசனை, அசுத்தம் நிறைந்து காணப்படும். ஆனால் வெளித்தோற்றம் ஜோடிக்கப்பட்டு அழகாக தோற்றமளிப்பேன். இதனால்தான் இயேசு அப்படி கூறுகிறார். ஏனென்றால் வெளித்தோற்றத்தில் வெண் வஸ்திரம் தரித்து சமுதாயத்திலே உயர்ந்த அந்தஸ்திலே இருந்துகொண்டு மாய்மாலமான வாழ்வு வாழும் மக்களைப் பார்த்து, இயேசு சொல்கிறார், “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை” என்று. வேதபாரகர், பரிசேயர் இவர்களைப் பார்த்துத்தான் இயேசு சொல்கிறார், “நீங்கள் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள். உள்ளத்திலோ மாயையினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்து இருக்கிறீர்கள்” என்றார்.
அன்பானவர்களே! இப்படிப்பட்டதான வாழ்க்கை உங்களுக்கு வேண்டாம். உள்ளத்தில் ஒரு காரியம் வைத்துக்கொண்டு வெளியே நல்லவர்கள் போல் நடிப்பது தேவனுக்குப் பிரியமில்லாத காரியம். என்னைப் போல இருக்காதீர்கள். உள்ளே நாற்றமும் அசிங்கமும்! அது என்னோடே போகட்டும். நீங்கள் இயேசுவைப்போல் ஆகுங்கள். வேதம் சொல்வதைக் கேட்டு நடவுங்கள். இந்த கல்லறை வாழ்க்கை உங்களுக்கு வேண்டாம். இதுவே என் கதறல். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக நீங்கள் வாழ்ந்தால், இந்த உலகத்திலும் நரக வாழ்க்கை, உலகத்திற்கு பின்பும் நித்திய நரக வாழ்க்கை. அது வேண்டாம்.
- Mrs. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
ஊழியர்களுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் “கழுதைகள் கையேடு” அனுப்ப Postal permit கிடைக்க ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250