By Village Missionary Movement
Saturday, 26-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 26-02-2022 (God’s creation’s special)
தீர்க்கனின் இரதம்
“...கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?....” – 1சாமுவேல் 15:22
பொதுவாகவே ஊரைச் சுற்றுவது, இங்கும் அங்கும் ஓடித் திரிந்து ஜாலியாக இருப்பது எங்களுக்கு மிகவும் பிடிக்கும். எங்களுடைய ஸ்பெஷாலிட்டியே backward kick. எங்களுக்குத் தெரியாதவர்கள் எங்கள் அருகில் வந்தால் அவர்களை உதைத்து நாங்கள் தப்பி சென்றுவிடுவோம். ஆனால் எங்கள் எஜமான்களுக்கு நாங்கள் ஒரு விசுவாசி. குறிப்பாக பொதி சுமக்கவும், எங்கள் மீது ஜனங்கள் அமர்ந்து பயணிப்பதற்கும் நாங்கள் மிகவும் பயன்படுகிறோம்.
ஒருநாள் என் வாழ்வில் ஆச்சரியமும் அதே வேளையில் திகிலும் அடையக்கூடிய ஒரு சம்பவம் நடந்தது. நான் ஒரு தேவமனிதனை சுமந்துகொண்டு யூதாவிற்கு சென்று கொண்டிருந்தேன். போகும்வழியில் ஒரு சிங்கம் எதிர்பட்டது. நடுங்கிப் போனேன். அது அந்த தேவமனிதனை கொன்றது, என்னையோ ஒன்றும் செய்யவில்லை. மாறாக என்னருகில் நின்று கொண்டிருந்தது. பிறகுதான் புரிந்துகொண்டேன். நான் சுமந்து வந்த தேவமனிதர் தேவன் அவருக்கு கொடுத்த ஊழியத்தை சிறப்பாய் முடித்துவிட்டு திரும்பும்போது, ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பொய் தீர்க்கதரிசனத்தை நம்பி தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனார். இதுதான் அவரது மரணத்திற்கு காரணம் என அறிந்துகொண்டேன்.
எனக்கன்பானவர்களே! நான் தீர்க்கனை சுமந்து சென்ற கழுதைதான். அவர் கர்த்தருடைய வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாமுக்கு உரைத்தது உண்மைதான். ஆனால் அவர் தவறிப்போனது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், பொய் வார்த்தைகளை நம்பினதே! இவர் தேவனுடைய வார்த்தையை சரியாக உரைத்தார், நன்றாக ஊழியம் செய்தார். ஆனால், தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலே கோட்டைவிட்டார், அதை அப்பியாசிக்க தவறிவிட்டார். பிரியமானவர்களே! நீங்களும் கூட நன்றாக ஊழியம் செய்யலாம். கர்த்தருடைய வார்த்தையை நேர்த்தியாக பிரசங்கிக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்பியாசிப்பது மிகவும் முக்கியம். அதிலே நீங்கள் தவறும்போது மிகவும் பரிதபிக்கக்கூடிய நபராக மாறலாம். அதிக ஜாக்கிரதையோடு இருங்கள். ஏதோ உங்களிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது, சொல்லிவிட்டேன்.
- K. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
தமிழ்நாட்டில் ஆலயம் இல்லாத ஆயிரம் கிராமங்களில் ஆலயம் கட்டுவதற்கென எடுக்கப்படும் பிரயாசங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250