Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  28-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Monday, 28-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  28-02-2022 (God’s creation’s special)

பறவையும் பயன்படும் 

“அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” – பிலிப்பியர் 2: 4

நாங்கள்தான் எலியா தீர்க்கதரிசிக்கு ஆகாரம் கொடுக்கும்படி அனுப்பப்பட்ட காகங்கள். தேசத்தில் யாரும் எங்களை புறாக்களைப் போன்று வீடுகளில் செல்லப் பறவையாக வளர்க்க மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் அசைவ உணவு விரும்பிகள். எங்கள் நிறம் கருப்பு தான். ஆனால் நாங்கள் பார்ப்பதற்கு அழகாயிருப்போம். எங்கள் பழக்க வழக்கம் என்னவென்றால், நாங்கள் எங்கள் உணவை உண்ணும்போது எங்கள் சொந்தங்களை வரவழைத்து கூட்டமாக சேர்ந்தே உண்போம். எங்கள் கூட்டில் வாழும் குயில் குஞ்சுகளையும் எங்கள் பிள்ளையைப்போல் கவனிப்போம். எங்கள் சொந்தத்தில் யாராவது இறந்துவிட்டால் கூட்டமாக சேர்ந்து துக்கங்கொண்டாடுவோம். இப்படி பல நற்குணங்கள் எங்களிடம் உண்டு. 

எங்கள் நற்குணங்களை அறிந்த தேவன் எங்களை தம்முடைய பணிகளுக்குப் பயன்படுத்தினார். எங்களுக்கு சுயநலம் கொஞ்சம் கூட கிடையாது என்று  அறிந்த தேவன், நாங்கள் பொது நலத்தோடு வாழ்கின்றபடியால் எங்களை தேவன் தம்முடைய பணியில் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். ஆகாப் என்ற இஸ்ரவேலின் இராஜாவுக்கு மறைவாக ஒளிந்து கொண்டிருந்த எலியா என்ற தேவனுடைய தீர்க்கதரிசிக்கு நாங்கள் காலையும், மாலையும் உணவு கொடுப்பதுதான் எங்கள் வேலை. ஒருநாள், இரண்டு நாள் அல்ல பல மாதங்கள் இந்த வேலையை கருத்தாய் செய்து முடித்தோம். எவ்வளவு பசி எனக்கெடுத்தாலும் நாங்கள் அந்த உணவில் வாய் வைப்பதில்லை. ஆகவேதான் தேவன் எங்களைப் பற்றியும் எங்கள் உன்னதமான பணியைப் பற்றியும் வேதத்திலே எழுதி வைத்துள்ளார். 

பிரியமானவர்களே! எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பிலே உண்மையுள்ளவர்களாய் இருந்தோமென்றால் அதற்கு எங்கள் பழக்கவழக்கம் மிகவும் முக்கியமானது. நாங்கள் எங்களைக் குறித்து மாத்திரம் எண்ணாமல் மற்றவர்களைக் குறித்தும் யோசிப்போம். பிலி. 2: 4ல் அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக என்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? எங்களில் உள்ள இந்த நல்ல பழக்கம் ஏதோ ஒரே நாளில் உண்டானதல்ல, இதெல்லாம் அன்றாடம் நாம் கடைபிடித்தால் மட்டுமே சாத்தியமாகும். எனக்கன்பானவர்களே! நீங்களும் உங்களுக்குரியதை மட்டும் பாராமல் பிறருக்காகவும் வாழுங்கள். அதில் கிடைக்கும் சந்தோஷம் மிகவும் பெரியது.
-    Mrs. புவனா தனபாலன் 

ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் துவக்கியுள்ள மருத்துவ சேவைப் பணிகள் இப்புதிய வருடத்தில் விரிவாக்கம் செய்யப்பட. இதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் நம்முடன் வந்து இணைய ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet jojobet grandpashabet grandpashabet palacebet sonbahis jojobet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet