Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  08-03-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 08-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  08-03-2022

இயேசுவால் பாராட்டப்பட்டவள் 

“...என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” – மாற்கு 14: 6 

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளில், அவரை சந்தித்த அத்தனை பெண்களிலும் அவரது அதிகமான பாராட்டைப் பெற்றது அவரது சிரசில் நளத தைலம் ஊற்றிய பெண்ணே! மற்ற எல்லோரும் அவளை இகழ்ந்தபோதும், இவள் என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள், தன்னால் இயன்றதைச் செய்தாள் என்றெல்லாம் பாராட்டியதோடு, உலகம் முழுவதும் அவளை நினைவுகூரும்படி பெருமைப்படுத்தினார். இயேசு அவ்வாறு பாராட்டக் காரணம் என்ன? அவள் தன்னால் இயன்றதை இயேசுவால் அங்கீகரிக்கப்படும்படியான ஒரு காரியத்தைச் செய்ததுதான்.    

சீன தேசத்து இளம் பெண்மணி நோபி ஜோ ஒரு கர்த்தரின் பிள்ளை. தான் செய்ய விரும்பும் காரியத்திற்காக ஜெபித்தபோது, அவளது திட்டம் தேவதிட்டத்திற்கு மிகவும் முரணானது என்று வெளிப்படுத்தினார். அப்போது அவள் தேவ சித்தத்திற்கு தன்னை அர்ப்பணித்தபோது, “ஓர் குறிப்பிட்ட குன்றின் உச்சியிலிருந்து குதித்து அநேகர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் அந்த மனமுடைந்த மக்களுக்கு அவள் சொந்தம்” என்றும் கூறினார். உடனடியாக நோபி ஜோ ஒரு செய்திப் பலகையை எடுத்து அதில் “தற்கொலை செய்யாதே! முதலில் நோபி ஜோவை வந்து பார். தேவன் உன்னை நேசிக்கிறார்” என்று எழுதி அதில் தன் முகவரியையும் கொடுத்து அக்குன்றின் உச்சியில் வைத்துவிட்டாள். முதக் நாளிலேயே அநேகர் வந்து அவளை சந்தித்தனர். அப்பெண்ணின் 92வது வயதில் அவர் மரிக்கும் வரையில் 5000 பேர் தற்கொலையிலிருந்து காப்பாற்றப்பட்டு தேவ அன்பை ருசித்தனர். தேவன் அங்கீகரிக்கும் ஒரு காரியத்தைச் செய்ததால் அப்பெண் அநேகருக்கு ஆசீர்வாதமாக மாறினாள். தேவனுடைய பாராட்டும் நிச்சயமாகக் கிடைத்திருக்கும். 

அன்பான சகோதரிகளே! பெண்ணாகப் பிறந்து விட்டதால் என்னால் தேவனுக்கோ, மனிதருக்கோ பிரயோஜனமாக இருக்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறீர்களோ? வேண்டாம். நோபி ஜோவிற்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்தவர், தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபித்தால் உங்களையும் பயன்படுத்துவார். தேவன் அங்கீகரிக்கும் அந்தரங்க தானதர்மங்கள், ஊழியங்கள், உபவாச ஜெபங்கள் ஆகியவற்றைக் கிரமமாகச் செய்யலாமே. இந்தச் சிறியர் என்று இயேசு மத். 25: 35-36 வசனங்களில் பட்டியலிடுபவர்களுக்காக உங்களால் இயன்றதைச் செய்யும்போது எனக்காகவே செய்தீர்களென்று இயேசு உங்களைப் பாராட்டுவார். இயேசுவின் பாராட்டைப் பெறப்போகும் ஒவ்வொரு பெண்ணிற்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள். 
-    Mrs. கீதா ரிச்சர்ட் 

ஜெபக்குறிப்பு:
பணித்தள ஊழியங்களில் பயன்படுத்தப்படும் நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் பழுதின்றி செயல்பட ஜெபியுங்கள்.   

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet jojobet grandpashabet radissonbet palacebet sonbahis cratosroyalbet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet