By Village Missionary Movement
Sunday, 13-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 13-03-2022 (Kids Special)
Benefit உண்டா?
“...நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;…” – எபேசியர் 2:10
Children’s Special மூலமா கதை கேட்கிற உங்களை அன்போடு வாழ்த்துகிறோம். இன்றைக்கு காட்டை சுத்தி பார்க்க போகலாமா வர்றீங்களா? காட்டில் என்னவெல்லாம் இருக்கும். விதவிதமான செடிகள், கலர்கலரான பூக்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் இருக்கும். அப்படித்தானே! ஆலமரமும், மாமரமும் நமக்கு என்ன சொல்ல போறாங்கன்னு கேட்போமா, சந்தோஷம்தானே!
அந்த காட்டில் ஆலமரம் பெரியதா, உயரமா இருந்ததால நிறைய நிழல் கொடுக்கும். ஆனால் அதோட நிழலில் யாராவது உட்கார வந்தால் தன் காய்ந்த இலைகளை அவர்கள் மேல் உதிர்த்து விட்டு, அவர்களை விரட்டி விடும். பெரிய மரமாக இருக்கிறது, கூடு கட்ட நல்ல மரம் என நினைத்து பறவைகள் வரும்போதெல்லாம் ஆலமரம் கோபமாக பேசிவிடும். “போங்க, நீங்க கத்திக்கொண்டே இருப்பீங்க இங்கே கூடு கட்ட கூடாது” என்று சொல்லிவிடும் அந்த ஆலமரம். இப்படி யாருக்கும் பிரயோஜனமில்லாமல், கர்வமா இருந்தது ஆலமரம். எல்லா பறவைகளும் மாமரத்திற்கு சென்று கூடு கட்டி வாழ்ந்தன. மாமரமும், பறவைகளும் நல்ல நண்பர்களாக சந்தோஷமா, ஜாலியாக இருந்தது.
இது அந்த ஆலமரத்திற்கு பிடிக்காது. சும்மா சத்தம்போட்டு கத்திக்கொண்டே இருக்காதீங்க. எனக்கு எரிச்சலாக இருக்குதுன்னு பொறாமைப்படும். ஒருநாள் அந்த வழியே வந்த தேனீக்கள் ஆலமரத்தை நோக்கி சென்றது. ச்சீ, ச்சீ... உங்க தொல்லைகளை என்னால தாங்க முடியாது போங்க, போங்க என்று விரட்டி விட்டது. உடனே தேனீக்கள் பக்கத்திலிருந்த மாமரத்திற்கு சென்று கூடுகட்டி வாழ்ந்து வந்தன.
ஒருநாள் இரண்டு விறகு வெட்டிகள் காட்டிற்கு வந்து மாமரத்தில் தேனீக்கள் இருந்ததால அருகில் செல்ல பயந்து ஆலமரத்தை வெட்டினார்கள். “யாருக்கும் பிரயோஜனம் இல்லாத ஆலமரம் எதற்கு வெட்டட்டும்” என்று தேனீக்கள் கூறின. “இல்ல நண்பர்களே ஆலமரத்துக்கு உதவி செய்யுங்கள். இனி பிரயோஜனமாய் இருக்கும்” என்று மாமரம் சொன்னதும் , தேனீக்கள் கூட்டமாக சென்று விறகு வெட்டிகளை விரட்டி விட்டன. “நீ செய்த உதவியால் நான் உயிர் பிழைத்தேன். இனி எல்லாருக்கும் பிரயோஜனமாய் இருப்பேன் Thank you மாமரமே” என்று சொன்னதும், பறவைகள், தேனீக்கள் எல்லாம் கைதட்டி சந்தோஷப்பட்டார்கள்.
குட்டீஸ், மாமரத்தைப் போல நீங்களும் மற்றவர்களுக்கு பிரயோஜனமாய் இருக்கணும். ஆலமரத்தைப் போல் இருந்தால் உங்களை மாற்றிக்கொள்ள தயங்கவே கூடாது. Ok வா God bless you all.
- A. பியூலா
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250