Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  10-04-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 10-Apr-2022

இன்றைய தியானம்(Tamil)  10-04-2022 (Kids Special)

Gift வேணுமா?     

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்;… அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.” – வெளி.22:12                     

ஹலோ குட்டீஸ்! இசை என்றாலே பிடிக்காத நபர் யாருமே இருக்க முடியாது இல்லையா? Keyboard, drum-set, Gittar போன்ற விதவிதமான இசைக் கருவிகள் வாசிக்க உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் தானே. சிலர் அதை பழகிக் கொண்டும் இருக்கீங்க Very Good. உங்களைப் போலவே ராஜன் என்ற தம்பிக்கு Keyboard வாசிக்க ஆசை. ஆனால் அவங்க வீட்டில் இசைக்கருவி வாங்கவோ, பயிற்சிக்கு செல்லவோ போதுமான வசதி இல்லை.

ஒரு நாள் ராஜன் அப்பாவோடு சேர்ந்து கடைத்தெருவுக்கு சென்றிருந்தான். அங்கே இசைக்கருவிகள் அனைத்தும் விற்கும் கடையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். என்ன தம்பி ரொம்ப நேரமா யோசிச்சுக் கொண்டே இருக்கிறாயே! என்று கடைக்காரர் கேட்டார். Keyboard பழக ஆசை இருக்குது. ஆனால்....இப்படி சொல்லும்போதே கடைக்காரர் தினமும் மாலை எங்க வீட்டிற்கு வா நான் கற்றுத் தருகிறேன் என்று விலாசத்தையும் கொடுத்தார். அதற்கு Fees-ஆக ராஜன் கடைக்காரரிடம் நான் காலையிலேயே கடைக்கு வந்து பெருக்கி துடைத்து சுத்தம் பண்ணி வைக்கிறேன் என்றான். அவரும் சரி சொல்ல, ராஜன் சந்தோஷத்தோடு வீட்டிற்கு சென்றான்.

அடுத்த நாள் காலையிலே எழும்பி சாவியை வாங்கிக் கொண்டு கடையை சுத்தம் பண்ணி அழகாக வைத்திருந்தான். கடைக்காரர் வந்ததும் ஸ்கூல்க்கு கிளம்பி போய்விடுவான். ஒரு நாள் காலையில் வேகமாகவே கடைக்காரர் வந்து விட்டார். இனிமையான பாடல்களின் ராகங்கள் காற்றில் மிதந்து வந்தது. கேட்பதற்கு இனிமையாக இருந்தது. யார் இதை வாசிப்பது என்று பார்த்தால் ராஜன். அழகாக Keyboard வாசித்துக் கொண்டிருந்தான்! கடைக்காரர் வந்ததும் பயந்து போய் நின்று கொண்டிருந்தான். இதையெல்லாம் நான் உனக்கு இன்னும் கற்றுக் கொடுக்கவில்லையே உனக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறேன் பார் என்றதும் ராஜன் அழுவதைப்போல்  நின்று கொண்டிருந்தான். அவர் சிரித்தபடி உனக்கு எந்த Keyboard வேண்டுமோ அதை எடுத்துக் கொள். அது தான் நான் உனக்கு தரும் பரிசு என்றதும் ராஜன் முகம் நட்சத்திரத்தைப் போல் பிரகாசித்தது தனக்கு வசதி வாய்ப்பு இல்லையென்றாலும் தன் திறமையை வளர்த்துக் கொள்ள நினைத்த ராஜனுக்கு பரிசு கிடைத்துவிட்டது. அப்படித்தானே!

செல்லக் குட்டிகளே! நீங்களும் கூட இயேசப்பா கொடுத்த தாலந்துகளை பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். நேரம் இல்லை, வசதி இல்லை.... அப்படியெல்லாம் சொல்ல கூடாது. தாலந்துகளை  பயன்படுத்தும்போது  அதற்கேற்ற வெகுமதியை இயேசப்பா நிச்சயம் தருவாங்க. OK.
-    Sis. பியூலா  

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet betplay jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet