Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-04-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 12-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 12-04-2022

 

தாகமாயிருக்கிறேன்

 

‘’…வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.’’ - யோவான் 19:28 

 

இயேசு சிலுவையில் மொழிந்த ஐந்தாம் வார்த்தை:

இந்திய தேசம் சுதந்திரம் பெற்றிருந்த நாட்கள் அது. ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியை பிரிக்கும் வண்ணமாக நில அளவையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இப்பணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த வேல்ட்மேன் என்பவர் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இவர் பக்தியுள்ள கிறிஸ்தவர் ஆவார். பகலில் பாலைவன வெயிலில் நில அளவையில் ஈடுபட்டு, மாலை நேரத்தில் தம்மிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்து வருவார். ஒரு இரவில் முழு நிலவு வெளிச்சத்தில் 40 பேர் கொண்ட கூட்டத்தினருக்கு இயேசுவைப் பற்றி பேசினார். இரட்சிப்பு, பரிசுத்தம், நியாயத்தீர்ப்பு, பரலோகம் என தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவில் இருந்த ஒருவர் நீங்கள் பேசும் இதற்கெல்லாம் அத்தாட்சியாக எழுத்து முறையாக ஏதேனும் உள்ளதா என்று கேட்டார். ஆம், இருக்கிறது உங்கள் மொழிகளில் என்னிடம் இரண்டு வேதாகமங்கள் உள்ளன. நான் அதை கொண்டு வருகிறேன் என்று கூடாரத்திற்குள் சென்றார். திரும்பி வரும் போது அந்த வேதாகமத்தை பெற்றுக் கொள்ள 40 பேரின் கரங்களும் நீட்டப்பட்டிருந்தன.

 

இதைக் கண்ட வேல்ட்மேனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அந்நூலை எனக்குக் கொடுங்கள் என்று கேட்ட 40 பேரின் விருப்பத்தையும் தாகத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டார். வேதாகமத்தை பெற்றுக் கொள்வதற்கு இந்தியர்கள் எவ்வளவு தாகமாய் உள்ளார்கள் என்று இன்னும் ஆவியில் அனலுள்ளவராய் தேவனுடைய ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். இந்தியர்கள் அனைவரும் இயேசுவை அறிந்து கொள்வது என்னுடைய தாகமாய் இருக்கிறது என்று வேல்ட்மேன் கூறினார்.

 

இன்றைய தியான செய்தியிலும் கர்த்தராகிய இயேசுவானவர் தாகமாயிருக்கிறேன் என்று கூறியதை வாசிக்கிறோம். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தவர் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவும், இரட்சிக்கப்படவும் தாகமாய் உள்ளார். ஒரு பாவி துன்மார்க்க வழியிலிருந்து திரும்பி இயேசுவிடம் வரும்பொழுது, முழு பரலோகமும் சந்தோஷப்படுகிறது. ஒரு மனிதன் மனந்திரும்பினாலே பரலோகம் சந்தோஷப்படும் என்றால் ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் இரட்சிக்கப்படும்போது முழு பரலோகமும் களிகூரும். இதுதான் நமக்காக இரத்தம் சிந்திய இயேசு கிறிஸ்துவின் தாகத்தைத் தணிக்கும் செயலாக இருக்கிறது. அதாவது தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிற பகுதியாக உள்ளது. ஆத்தும இரட்சிப்பே தேவனுடைய தாகத்தை தீர்ப்பதாகும். இயேசுவின் தாகத்தை தீர்க்க ஆத்தும ஆதாயம் செய்ய முன்வாருங்கள். ஆண்டவர் உங்களை பெலப்படுத்துவாராக !

- Bro.ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு:

‘’60 மிஷனெரி வீடுகள்’’ கட்டிக் கொடுப்பதற்கு பங்காளர்களை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş