Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-04-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 20-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 21-04-2022

 

பாடுகளை சகிப்போம்

 

“அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்...” - 2 தீமோ 2:12

 

இங்கிலாந்தில் பிறந்த வில்லியம் ஆல்ட் என்பவர் இலங்கையில் ஊழியம் செய்ய ஆட்கள் தேவை என்ற அழைப்பைக் கேட்டு தன்னை அர்ப்பணித்தார். தனக்கு தேவன் கொடுத்த ஊழியத்தில் தோள் கொடுக்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தன் மனைவி மற்றும் சில குடும்பங்களோடு இணைந்து பாய்மரக் கப்பலில் பிரயாணப்பட்டார். திடீரென புயல்காற்று கப்பலை அசைத்தது, பலர் காயமடைந்தனர். வில்லியம் ஆல்ட் மனைவியும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ வசதி இல்லாமல் உயிரிழந்தார். மனவேதனையோடு தன் மனைவியின் உடலை கடலில் எறிந்துவிட்டு பிரயாணப்பட்டார். துக்கத்தோடு இலங்கை மட்டக்கலப்பு வந்தடைந்தார் வில்லியம். செல்வச் சீமானாய் வாழ்ந்த அவர் இலங்கையில் குடிசை வீட்டில் சரியான உணவு இல்லாமல் தமிழை இரண்டு மாதத்தில் கற்றார். மேலும் 8 மாதத்தில் 8 கிராமங்களில் பள்ளி, கல்லூரி, பணித்தளம் என அமைத்தார். வில்லியம் ஆல்ட் வாழ்வில் பல போராட்டம், பாடுகள் இருந்தாலும் பின் வாங்காமல், முறுமுறுக்காமல், சோர்ந்து போகாமல் இருந்தார்.

 

இன்று அநேகர் வேலையில், குடும்பத்தில், ஊழியத்தில் பிரச்சனை, போராட்டம் வந்ததும் இந்த ஊழியம் வேண்டாம் என சோர்ந்து போய் விடுகிறார்கள். இல்லையென்றால் வேறே வேலை, வேறே இடம் என சென்று விடுகின்றனர். வேதத்திலும் தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்த எலியா, யோனா என்பவர்களுடைய வாழ்வில் பிரச்சனை போராட்டம் வந்ததும் என்னை எடுத்துக் கொள்ளும் என ஜெபித்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாய் வந்து தலைசாய்க்க இடமில்லை என வாழ்ந்து சிலுவை மரணம் கொடிது எனத் தெரிந்தும் ஏற்றுக்கொண்டு நமக்காய் பாடுபட்டு மரித்தார். 

 

பிரியமானவர்களே, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை, பதவி, ஊழியம், இவற்றில் பிரச்சனைகள், குழப்பங்கள், போராட்டங்கள் இருக்கும். ஆனாலும் வெறுத்து, முறுமுறுத்து, சோர்ந்து போகாமல் தேவனிடம் பெலன் கேட்டு தொடர்ந்து ஓடுவோம். சோதனை, பாடுகளைச் சகித்த கிறிஸ்துவை நினைத்து முன்நோக்கி ஓடுவோம், நிச்சயம் பரலோகத்தில் உயர்வைப் பெறுவோம்.

- Mrs அன்பு ஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு: 

தோழமை ஊழியர்கள் பணிசெய்யும் ஆலயம் இல்லா கிராமங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet güncel holiganbet giriş holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet ibizabet tambet grandpashabet jojobet nesinecasino betbey betgit grandpashabet betpuan cashwin matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet grandpashabet grandpashabet giriş holiganbet giriş çarkbet çarkbet giriş deneme bonusu