By Village Missionary Movement
Friday, 29-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 29-04-2022
நாவின் அதிகாரம்
“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;...” – நீதிமொழிகள் 18:21
என்னுடைய மிஷனெரி பணித்தளத்திலிருந்து என் குடும்பத்தினரைப் பார்க்க என் சொந்த கிராமத்திற்கு வந்திருந்தேன். இதை அறிந்த என்னுடைய நண்பன் வெளியூரிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்தான். பகல் முழுவதும் என்னோடு கூட இருந்து பேசிவிட்டு, சாயங்காலமாக தன்னுடைய வீட்டிற்குப் போக கிளம்பினான். நான் தான் அவனை பைக்கில் கொண்டு போய் பஸ் ஏற்றி விட சென்றேன். என்னுடையது பழைய பைக் என்பதால் ஹாரன் அடிக்காது. லைட்டும் டிம்மாகத்தான் எரியும். ஏனென்றால் பைக்கில் பேட்டரி டெட் ஆகிவிட்டது. இதைப் பார்த்த என்னுடைய நண்பன் திரும்ப எப்படி வீட்டிற்குப் போய் சேருவாய் என்றான். பைக்கோட நிலைமையைப் பார்த்து அவன் இப்படி சொன்னான். நான் சொன்னேன், இபோது நீ என்னோடு இருக்கிறாய் ஆனால் நான் போகும் போது இயேசப்பா பைக்கை ஓட்டுவாங்க என்று நான் சொன்னேன். அவனை இறக்கி விட்டேன். அவன் ஏறவேண்டிய பஸ்சும் வந்தது. அவன் ஏறி கிளம்பிவிட்டான். நானும் என்னுடைய பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன். கொஞ்ச தூரம் கழித்துப் பார்த்தால்தான் தெரியுது லைட் நல்லா பவரா அடித்தது. அப்போதுதான் நான் அறிந்தேன் தேவன் நம்முடைய சிறிய வார்த்தையையும் எவ்வளவு கனம் பண்ணுகிறார் என்று! ஆதலால் நம்முடைய வாழ்க்கையில் சிறிய காரியமோ, பெரிய காரியமோ நம்முடைய வார்த்தையால் அவரைக் கனம் பண்ண வேண்டும். நாம் அவரைக் கனம் பண்ணும் போது அவரும் நம் வார்த்தையை கனப்படுத்துகிறார்.
மேலும் வேதம் கூறுகிறது துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்பட முடியாது என்று. நாவைக் குறித்து இப்படி அநேக காரியங்களை நாம் வாசிக்க முடியும். ஆனால் நாம் பல நேரங்களில் இதை உணராதவர்களாய் நாவை பயன்படுத்தி நம் மனதில் தோன்றுவதை எல்லாம் பேசிக் கொண்டும் பிறரை புண்படுத்திக் கொண்டும், தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டும் இருக்கின்றோம். நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தமுண்டு, வல்லமையுண்டு. நாம் தேவனுக்கு அதைத் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
எனவே பிரியமானவர்களே, நாம் நம்முடைய வாயின் வார்த்தைகளில் கவனமாய் இருப்போம். நம் பேச்சு தேவனை உயர்த்துவதாய், அவரை புகழுவதாய், மகிமைப்படுத்துவதாய் இருக்கட்டும். தேவன் நமக்கு செய்த நன்மைகளைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். தேவ இராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம். அல்லேலூயா!
- P.ஜான் தாமஸ்
ஜெபக்குறிப்பு:
ஜெபக்கூடாரம் விரைவில் கட்டி முடிக்கப்பட, இதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250