Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16-05-2022
Share:

By Village Missionary Movement

Monday, 16-May-2022

இன்றைய தியானம்(Tamil) 16-05-2022

 

சுதந்திரப் பறவை

 

“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்...” - பிரசங்கி 11:9

 

“அறிவுரையா? அது எங்களுக்குப் பிடிக்காத ஒன்று. எங்களுக்கு பிடித்ததை எங்கள் இஷ்டப்படி செய்ய எங்களுக்கு சுதந்திரமில்லையா? எங்களது எல்லா காரியத்திலும் மூக்கை நுழைக்கிறீர்களே, நாங்கள் என்ன இன்னும் சிறுபிள்ளையா? எங்கள் காலம் வேறு, உங்கள் காலம் வேறு! சும்மா தொண தொணக்காதீர்கள்” இது வாலிபர்கள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் கேள்விகள். இதைத் தான் ஒரே வார்த்தையில் “Generation Gap” (சந்ததி இடைவெளி) என்று சொல்லி விடுகிறோம்.

 

வேதமும் வாலிபர்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளது. வாலிபனே! உன் மனது விரும்பும் வழிகளிலெல்லாம் நட, உன் கண் விரும்புவதை எல்லாம் பார். “ஆனாலும்” இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என அறி” என்று ஒரு “செக்” வைக்கிறது. அதே வேதம், “என் மகனே புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள் அதை விட்டு விடாதே, அதை காத்துக்கொள். அதுவே உனக்கு ஜீவன்” (நீதி. 4:13) என்று கூறுகிறது. கெட்ட குமாரன் உவமையிலே, புத்திமதியை விரும்பாத அவன் அப்பாவின் கண்காணிப்பிலிருந்து நழுவி, சுதந்திரமாக வாழ விரும்பினான். சொத்தில் தனது பாகத்தைப் பிரித்துக் கொண்டு வெளிநாட்டிற்கு சுதந்திரப் பறவையாக பறந்து சென்றான். முடிவு உனக்கே தெரியும். அதே போல தன் கண்ணின் காட்சியிலும், மனதின் யோசனையின் படியும் நடந்த சிம்சோனின் முடிவும் நீ அறிந்ததே!

 

அன்பான வாலிபனே! நம் விருப்பப்படி வாழ்வதில் மெய்யான சுதந்திரம் இல்லை. “கிறிஸ்துவுக்கு அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்தவன் எல்லாவற்றிலும் பூரண சுதந்தரம் உள்ளவன்.” நம் கண்முன் இருக்கும் எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரம் உண்டு. ஆகிலும் எல்லாம் நமக்கு தகுதியிராது என்பதை உணர்வோம். சுதந்திரவானில் பறந்து, பாவ காற்றை சுவாசித்து வழிதப்பி நடப்பீர்களானால் பிசாசின் கண்களுக்கு இரையாக நேரிடும். போதை, புகை, குடி, சினிமா, வன்முறை, விபச்சாரம் போன்ற பாவ அடிமைத்தனத்திலிருந்து கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் விடுதலை அடைவதே மெய்யான சுதந்திரம். வேத வசனமும், பெற்றோரின் அறிவுரையும் இரு இறக்கைகளாக மாறும் போது நீ பாதுகாப்பாய் பறக்க முடியும்

- R. கிரேஸ் 

 

ஜெபக்குறிப்பு:

தினந்தோறும் அதிகாலை 5 மணிக்கு You tube-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் Healing service-ல் பங்குபெறும் நபர்கள் சுகம் பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet