Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-05-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 19-May-2022

இன்றைய தியானம்(Tamil) 19-05-2022

 

விசுவாசம்

 

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;...” - எபிரெயர் 11:6

 

கடலோரத்தில் வாழ்ந்த மீனாவின் குடும்பம் மீன்பிடித் தொழிலை நம்பியிருந்தது. அங்கு வாரந்தோறும் Sunday Class நடத்தி வரும் அக்காவின் வார்த்தையில் மீனா விசுவாசத்தில் வளர்ந்தாள். ஒருநாள் அவளது அப்பா இன்னும் சிலருடன் மீன்பிடிக்கச் சென்றவர் திரும்பி வரவில்லை. ஒருநாள்... இரண்டு நாள் ஆனவுடன் ஊர்மக்களெல்லாம் அவர் இறந்திருப்பார், இனி வர வாய்ப்பில்லை என்று துக்கம் விசாரிக்க வந்தனர். ஆனால் இவளோ ஆண்டவர் மீது விசுவாசம் வைத்தவளாய் நிச்சயம் என் அப்பா வருவார் என்று நம்பிக்கையாயிருந்தாள். 5 வது நாள் ஒரு படகு வந்தது. அதில் மீனாவின் அப்பா வந்தார். கர்த்தர் மீனாவின் விசுவாசத்தைக் கனப்படுத்தினார்.

 

ராகாப் என்பவள் ஒரு வேசி. யோசுவா எரிகோவை வேவு பார்க்கும்படி இரண்டு மனிதரை அனுப்பினார். ராகாப் அவர்களுக்கு உதவி செய்தாள். இராஜா ஆள் அனுப்பி அவர்களை கொண்டுவரச் சொன்னார். ஆனால் ராகாப் அவர்களை ஒளித்து வைத்து கயிறு மூலம் அலங்கத்தில் இருந்து இறக்கிவிட்டு, எரிகோ அழிக்கப்படும் போது தன்னையும் தன் குடும்பத்தையும் அழிக்காதபடிக்கு வேண்டிக் கொண்டாள். அதற்கு அடையாளமாக தன் வீட்டு ஜன்னலில் விசுவாசத்தோடு சிவப்பு நூலைக் கட்டினாள். விசுவாசத்தின் பலனாக எரிகோ கோட்டை அழிக்கப்படும் போது ராகாப்பும் அவளது குடும்பமும் அழிந்து போகாதபடிக்கு காக்கப்பட்டது. கர்த்தர் மேல் வைத்திருந்த விசுவாசத்தினால் விசுவாசப்பட்டியலில் இவள் இடம் பெற்றாள். அதுமட்டுமல்லாமல் உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து ராகாப்பின் சந்ததியில் பிறந்தார். 

 

எனக்கன்பானவர்களே! நம்முடைய விசுவாசத்தின் அளவு எப்படிப்பட்டது? தேவனை விசுவாசித்து நம் காரியங்களை பெற்றுக்கொள்கிறோமா? எபிரெயர் 11ம் அதிகாரத்தில் எத்தனை விசுவாச வீரர்களைப் பார்க்கிறோம். அவர்களெல்லாம் விசுவாசத்தால் உலகத்தை ஜெயித்தவர்கள். அதே வேளையில் அந்த அதிகாரத்தின் பின் பகுதியில் நிந்தையடைந்தவர்களையும் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஆம், அழிந்து போகிற தங்கத்தை விட விலையேறப்பெற்ற விசுவாசம் சோதிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகும். ஆகவே விசுவாசத்தை விடாதிருங்கள். அற்புதம் நிச்சயம்.

- Mrs. எஸ்தர் காந்தி

 

ஜெபக்குறிப்பு: 

ஒவ்வொரு மாதமும் டிவியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யத் தேவையான கட்டணம் ரூ.9 இலட்சம் சந்திக்கப்பட. டிவி நிகழ்ச்சியைத் தாங்கும் பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet