Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-05-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 24-May-2022

இன்றைய தியானம்(Tamil) 24-05-2022

 

ஜெப ஜீவியம்

 

“அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய், அங்கே ஜெபம் பண்ணினார்.” – மாற்கு 1:35

 

ஹேமில்ட்டர் என்ற வேத கலா சாலையிலிருந்த மூத்த ஊழியரான பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர் பாக்கஸை சோதித்துவிட்டு அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார். டாக்டர் சென்றவுடன் படுக்கையிலிருந்து பாக்கஸ், தன்னுடைய நண்பர்களை கையசைத்துக் கூப்பிட்டு, ‘’டாக்டர் சொன்னதை என்னிடம் மறைக்காமல் கூறுங்கள்’’ என்றார். “நீங்கள் இன்னும் அரைமணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது’’ என்று டாக்டர் சொன்னதை கண்ணீர் மல்க கூறினர். உடனே பாக்கஸ், ‘’அப்படியானால் என்னை படுக்கையிலிருந்து எடுத்து முழங்காலில் நிறுத்துங்கள். என் வாழ்வின் கடைசி நிமிடங்கள் முழங்காலில் நின்றபடியே முடியட்டும்” என்றார். முழங்காலில் நின்றபடியே அவரது உயிர் பிரிந்தது. பல வருடங்களாக, தான் கடைபிடித்து வந்த ஜெப பழக்கத்தை உயிர் பிரிகிற கடைசி மணித்துளிகளிலும் தவறாமல் கடைப்பிடித்தார்.

 

இயேசுவானவர் பூமியில் வாழ்ந்த நாட்களில் பல இடங்களில், பல நேரங்களில் ஜெபித்துள்ளார். அவருடைய 3½ ஆண்டுகள் ஊழியத்தில் வெற்றியின் ரகசியமே அவருடைய ஜெப ஜீவியம். தன்னுடன் இருந்த சீஷர்களையும் ஜெபிக்க பழக்குவித்தார். இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்படும் முன்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்தில் கண்ணீரோடு ஜெபம் பண்ணினார். சீஷர்களோடும், அநேக மக்களோடும் இருந்தாலும் பிதாவோடு உள்ள உறவை புதுப்பிக்க தனியே சென்று ஜெபித்தார்.

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நம்முடைய ஜெப ஜீவியத்திற்கு மிகச்சிறந்த முன்னோடி இயேசு கிறிஸ்துவே! அவர் ஜெபித்துதான் ஊழியப் பாதையில் வெற்றி கொண்டார். ஜெபம் என்பது தேவனோடு பேசுவது, தேவனோடுள்ள நமது உறவை புதுப்பித்துக் கொள்வது, ஜெபம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு அது உயிர் மூச்சு போன்றது. ஜெபம் உங்களுக்கு பழக்கமாக மாறும்போது அற்புதங்கள் வாழ்க்கை முறையாக மாறும். அதே ஜெபம் கடமைக்காக இருக்கும் பொழுது வாழ்வில் மாற்றங்கள் இருக்காது. உங்கள் ஜெபம் கிறிஸ்துவோடு உள்ள உறவை புதுப்பிக்கிறதாய், மேம்படுத்துகிறதாய் இருக்கட்டும்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்  

 

ஜெபக்குறிப்பு:

ஊழியர்களுக்கென்று வெளியிடப்படும் “கழுதைகள் கையேடு” அனுப்ப Postal Permit கிடைக்கப் பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis wbahis grandpashabet betgit betsalvador matbet meritking