Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-06-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 07-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 07-06-2022

 

கசக்குவதால் மணம்

 

“... அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.” – யோபு 23:10

 

“தடுப்பு மருந்துகளின் தந்தை” என அழைக்கப்படும் லூயி பாஸ்கலுக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று பிள்ளைகள் அடுத்தடுத்து டைபாய்டு வந்து இறந்து விட்டார்கள். உடனே அவர், இது போன்ற நோய்களுக்கு என்ன காரணம் என யோசிக்கலானார். பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நுண்ணுயிர்கள்தான் இந்த நோய்களுக்குக் காரணம் என கண்டறிந்தார். மேலும் இதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தடுப்பு மருந்துகளையும் கண்டறிந்தார். டைஃபாய்டுக்கு மட்டுமன்று மஞ்சள்காமாலை, டிப்திரியா, ரேபிஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறிந்தார். அவரது வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்புகளே, புதிய கண்டுபிடிப்புகளுக்கு நேராய் வழிநடத்தியது.

 

ரோஜா மலர்கள் முட்களில், உரசும்போதுதான் மணம் அதிகம் வருகிறது. சந்தனக்கட்டை உரச உரசத்தான் மணம் வீசுகிறது. அது போல் மனிதராகிய நாமும், சோதனைக்குட்படும் போதுதான் நமக்குள் உறைந்து போய், அடி ஆழத்தில் இருக்கும் பண்புகள் வெளிக் கொண்டுவரப்படுகிறது. சோதிக்கப்படும்போது கஷ்டமாக இருந்தாலும், அந்நேரத்தில்தான் நம் அசாதாரணத் தன்மைகள் வெளிப்படுகின்றன. நம்முடைய மொத்த வலிமையை அப்போதுதான் நம்மால் அறியமுடியும். நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் திறமைகள் கூட சோதிக்கப்படும்போது வெளிப்படும். அதனால் தான் யோபு தைரியமாக சொல்கிறார், “அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்று! மோசே வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டபோது, பெரிய தலைவனாக மாற்றப்பட்டான். யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட போதுதான், சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லும் திறன் வெளிவந்தது. யோபு சோதிக்கப்பட்ட பின்தான், எல்லா சூழலிலும் கர்த்தரை விடாதவர், கர்த்தருக்கு பயந்தவர் என அறிய முடிந்தது.

 

பிரியமானவர்களே! நான் மட்டும் சோதிக்கப்படுகிறேன் என சோதனையை பார்த்து சோர்ந்துபோகாதிருங்கள். லூயி பாஸ்கலைப் போல் தைரியமாக சோதனையை எதிர்கொள்ளும்போதுதான், சாதனை படைக்க முடியும். நம்மில் உள்ள திறமைகளை அறிய, வலிமையை அறியவே, சோதனைகள்! சாதனை படைக்க எல்லோருக்கும் ஆசை. அதற்கு சோதனையை எதிர்கொள்வது அவசியம்! சோதனையை எதிர்கொண்டால் நீங்களும் சாதனையாளராக மாறலாம்! சோதனை இல்லாமல் சாதனை இல்லை; வேதனை இல்லாமல் வெற்றியில்லை!

- Mrs.அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:

எழுப்புதல் விரும்புவோர் முகாமில் கலந்துகொள்கிற நபர்கள் செயல்படுகிறவர்களாக எழும்ப, இவர்களைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet betgit radissonbet