Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-06-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 12-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 12-06-2022 (Kids Special)

 

முயற்சி செய் 

 

“உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன். என் தேவனால் ஒரு மதிலைத் தாண்டுவேன்.” – சங்கீதம் 18:29

 

குட்டீஸ்! ரொம்ப நாள் லீவ்-க்கு அப்புறம் ஸ்கூல்-க்கு போறது கஷ்டமா இருக்குதா? இரண்டு நாளில் பழகி விடும். சீக்கிரமாகவே எழும்பி Correct Time-க்கு கிளம்ப, School Bus-ல, Auto-வில் உங்களை அனுப்புற வரை அம்மா ஓய்ந்திருக்க மாட்டாங்க. காலமே எழுந்து, சமையல் செய்து, உங்களுக்கும் வீட்டிற்கும் தேவையான எல்லாக் காரியத்தையும் சளைக்காமல் செய்கின்ற பெற்றோரின் வார்த்தையை அசட்டை பண்ணக் கூடாது. 6:00 மணி ஆகிடுச்சு, 7:00 மணி... எழும்பு, எழும்பு என்று சொல்றதுக்கு முன்னாலேயே, நீ எழுந்து Prayer பண்ணி Bible வாசித்து விட்டுத்தான், School- க்கு போகணும். இந்தப் புதிய கல்வியாண்டில் சிறப்பாகப் படிக்க முயற்சி செய்வது ரொம்ப முக்கியம்.

 

இன்றைக்கு அதைப் பற்றித்தான் கதை கேட்கப் போகின்றோம். கேட்கலாமா? ஒரு ராஜா தன் ஊர் மக்களிடம், “உங்களில் யார் பலசாலி என்று கண்டுபிடிக்க ஒரு போட்டி வைக்கப் போறேன், போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் ஒரு வாரம் கழித்து அரண்மனைக்கு வரவேண்டுமென்று” அறிவித்தார். “வெற்றி பெற்றவர்களுக்கு 1000 பொற்காசுகள் வழங்கப்படும்” என்று சொன்னதும், கூடுதல் மகிழ்ச்சியோடு போட்டிக்கு தயாரானார்கள் ஊர் மக்கள். உடற்பயிற்சி செய்தார்கள், இன்னும் சிலர் Healthy food சாப்பிட்டாங்க, ஜிம்முக்கு போனாங்க. ஒரு சிலர் சாப்பிட்டு, சாப்பிட்டுத் தூங்கினாங்க... ராஜா சொன்ன நாள் வந்தது. அரண்மனையில் கூட்டம் அலைமோதியது. 100 அடி உயரமுள்ள, மிகப்பெரிய கதவு மூடியிருந்தது. பார்ப்பதற்கு இரும்புக் கதவு போல இருந்தது. அந்தக் கதவை தள்ளி திறக்க வேண்டுமென்று ராஜா சொன்னார். 

 

இவ்வளவு பெரிய கதவை யாராலும் கையால் தள்ளி திறக்க முடியாதே! ராஜா இப்படிப்போய் சொல்லிவிட்டாரே! என்று மாறிமாறிப் பேசிக் கொண்டார்கள். கொழுகொழுன்னு வந்தவங்க கூட, முயற்சி பண்ணவே இல்லை “நாம போய் திறக்க முடியவில்லையென்றால் அசிங்கமாயிடும்” என்று எண்ணி யாரும் கதவு பக்கத்தில் போக முன்வரவில்லை. ஒரு சின்னப் பையன் கதவு பக்கத்தில் போனான். தன் இரண்டு கைகளால், அதைத் தள்ளிப்பார்த்தான். அது உடனே Magic செய்வதுபோல் அழகாய் திறந்தது. என்ன ஆச்சர்யமா இருக்கா! அந்த கதவு வெறும் அட்டையால் செய்யப்பட்டிருந்தது. அந்த சிறுவனின் முயற்சியை அனைவரும் பாராட்டினாங்க. ராஜாவும் சொன்னபடி பரிசு வழங்கினார். என்ன குட்டி செல்வங்களே! “முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை! முயற்சி திருவினையாக்கும்” இப்படி படித்திருப்பீர்கள். நீங்களும் செயல்படுத்திக் காட்டணும். “எனக்கு இந்தப் பாடம் பிடிக்காது” என்றெல்லாம் சொல்லாமல் ஆண்டவர் துணையோடு இந்தப் புதிய கல்வியாண்டில் முயற்சி செய்து பாருங்கள். வெற்றி என்ற சிகரத்தை எட்டிவிடுவீர்கள். All the Best குட்டீஸ்... Bye. 

- Mrs. ஜீவா விஜய்  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet