Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-06-2022
Share:

By Village Missionary Movement

Monday, 27-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 28-06-2022

 

சத்துருக்களைச் சிநேகியுங்கள் 

 

“...உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” – லூக்கா 6:27

 

ஆப்பிரிக்காவின் மிகவும் பின்தங்கிய “யாகோ” பழங்குடி இனத்தவரான ‘ஒக்கஞ்சி” என்ற மரம்வெட்டும் தொழிலாளி, இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். அவர் வேலை பார்த்த இடத்திலே, உயர்ந்த ஜாதியான முதலாளி மன்ஸிஜோ, “யாகோ” இனத்தை வெறுத்ததினால், ஒக்கஞ்சியை வேலையிலிருந்து தூக்கிவிட காரணம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இனத்தின் மேலிருந்த வெறுப்பினால், இவரைக் குறைசொல்லி, “வேலைக்கு வராதே” என்று சொல்லிவிட்டார். இவர் மனமுடைந்து பேசியும், முதலாளியின் இருதயம் கரையாமல் கல்லாய் இருந்தது .அப்போது அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தை பலர் சேர்ந்து வெட்டுவதைக் கண்ட ஒக்கஞ்சி, முதலாவது மரத்தின் பெரிய கிளையை வெட்டிவிட்டு,மரத்தை வெட்டவேண்டும். இல்லையென்றால் அது திசைமாறி விழுந்து சேதத்தை விளைவிக்கும் என்று கூறினார். இவரின் பேச்சை அசட்டை செய்து ,தொடர்ந்து மரத்தை வெட்டிக்கொண்டிருக்கும் வேளையில் ,திடீரென மரம் முறிந்து அருகிலுள்ள வண்டிக்கு நேராக விழுவதைக்கண்டு நொடிப்பொழுதும் தாமதமில்லாமல் ,அதிலிருந்த தன்னுடைய முதலாளியை இழுத்து கீழே வீசி தானும் சேர்ந்து உருண்டார்.

 

எழுந்தவுடன் “இயேசுவே உமக்கு நன்றி” என கூறுவதைக் கவனித்த மன்ஸிஜோவின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள்! “ஒக்கஞ்சி, உன்னால் எப்படி என்னைக் காப்பாற்ற முடிந்தது? நானோ உன்னை முழுவதும் பகைத்துக் கொடுமைப்படுத்தி வந்தேனே, அதைப் பொருட்படுத்தாமல் என்னை நேசித்து உதவினாயே" என்று மன்ஸிஜோ கூறினார். இயேசுகிறிஸ்துவை நான் வணங்குவதால் அப்படிச் செய்ய முடிந்தது என்ற ஒக்கஞ்சியைப் பார்த்து மன்ஸிஜோ கண்ணீர் வடித்து, “என்னை மனித்துவிடு, நானும் உன் ரட்சகரைக் குறித்து அறிந்து கொள்ளவேண்டும்” என்று கூறினார். 

 

இயேசுகிறிஸ்து, தன்னைப் பிடிக்க வந்தவனின் காதை பேதுரு வெட்டினதும், மனமிரங்கி மீண்டும் காதை ஒட்டி அற்புதம் செய்தாரே! தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் சபிக்காமல், தானும் மன்னித்து, பிதாவையும் மன்னிக்கும்படி வேண்டினாரே! பிரியமானவர்களே! “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” என்று இயேசுகிறிஸ்து கூறினார். இதை செய்வது கடினமானாலும், இயேசுகிறிஸ்து நமக்குள் இருந்தால் நிச்சயமாக அதை நாம் செய்ய முடியும். நாம் நன்மை செய்து, மற்றவர்கள் நம்மை சபித்தால் நிச்சயமாக நமக்கு கோபம் வரும். ஆனால் கர்த்தருடைய அன்பு நம் உள்ளத்தில் இருந்தால் அவர்களையும் ஆசீர்வதிக்க முடியும்!

- Bro.ஹனீஸ் சாமுவேல்

 

ஜெபக்குறிப்பு:

7௦௦௦ ஊழியர்களைக் கொண்டு 1 இலட்சம் கிராமங்களைச் சந்திக்க எடுக்கும் பிரயாசங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet