By Village Missionary Movement
Tuesday, 05-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 05-07-2022
அன்பு
“...அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.” – கலாத்தியர் 5:13
லியோ டால்ஸ்டாய் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளர். அவருடைய மிகச் சிறந்த கதை ஒன்றினை தேவனுடைய வார்த்தையின் வழியாக சிந்திப்போமா?
ஒரு மனிதனுக்கு கடவுளிடமிருந்து வரம் கிடைத்ததாம். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது அம்மனிதன் “எல்லா மனிதரும் என்னிடம் மிகுந்த அன்பு காட்ட வேண்டும்” என்று கேட்டானாம். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த அவன், பிறரிடம் அன்பு கூராமல் தான் மட்டும் அன்பை அனுபவித்துக் கொண்டிருந்தபடியால் சலிப்படைந்து போனானாம். அவன் மீண்டும் கடவுளிடம் வந்து “அனைவர் மீதும் நான் அன்பு காட்ட வேண்டும் “ என்று கேட்டானாம் அதுவும் நிறைவேறியதாம். அனைவர் மீதும் அவன் அன்புகாட்ட, அவன் மீதோ யாரும் அன்பு காட்டவில்லையாம்! ஐயோ, அந்த கொடூர நிலையை சற்று நினைத்துப் பாருங்கள்! இறுதியில் பிறர் மீது நாம் அன்புகூர்ந்து, அவரிடமிருந்து அன்பைப் பெறுவதே உண்மையான மகிழ்ச்சி என்பதை உணர்ந்தானாம்
வேதத்தில் இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு உண்டென்றால், அது நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான். அவர் நம் மீது கொண்ட அன்பின் நிமித்தமாகவே, மனிதனாகப் பூமியில் பிறந்தார். அது மட்டுமின்றி நமக்காகவே இப்பூமியில் வாழவும் செய்தார். இறுதியில் தன் உயிரையே நமக்காகக் கொடுத்தார். தன் உடலின் கடைசி சொட்டு இரத்தம் வரையிலும் நமக்காக சிந்தினார். “இதே அன்பை நாமும் பிறர் மீது காட்ட வேண்டும்” என்று வாழ்ந்து காட்டியதுமன்றி , அதையே கட்டளையாகவும் கொடுத்தார். “உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்பதே பிரதான கற்பனைக்கு ஒப்பான இரண்டாம் கற்பனையாகும்.
தேவப் பிள்ளைகளே, நம்மில் எத்தனை பேர் பிறர் மீது அன்பு செலுத்தக் கருத்தாயிருக்கின்றோம்? இந்த உலகத்தில் மிகச் சிறந்த அன்பு ஒன்று இருக்குமானால், அது நாம் பிறர் மீது எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி செலுத்தும் அன்பு மட்டுமே ஆகும். அன்னை தெரெசாவின் அழகான சொற்கள் இவை- “உனக்காக வாழ்கிறேன் என்று சொல்வதைவிட, உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரையாவது சொல்ல வை” பிரதிபலனை எதிர்பார்க்காமல் பிறர் மீது ஊக்கமாக அன்பு கூருவோம்! தேவ கட்டளையை பின்பற்றுவோம்!!
- Mrs.ஞானஜோதி சிம்சன்
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரிப் பிள்ளைகளின் நடப்புக் கல்வியாண்டின் படிப்பிற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250