Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-07-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 12-Jul-2022

இன்றைய தியானம்(Tamil) 13-07-2022

 

உதவி வேண்டுமா?  

 

”...அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்” - எபிரெயர் 2:18

 

தமது ஒரே மகள் ரேச்சலின் திருமணம் அண்மையில்தான் நடந்தது. தனது மகளைப் பார்க்க அவளது தகப்பனார் சென்றபோது மகளும் – மருமகனும் அன்புடன் வரவேற்றனர். “ரேச்சல், உனக்குப் பிடித்தமான மீன்களை வாங்கி வந்திருக்கிறேன். சீக்கிரமாக சமையல் செய். சாப்பிடலாம்” என்று தகப்பனார் கூறினார். “அப்பா உங்க மருமகனுக்கு மீன் பிடிக்காது, எனவே நான் இப்போது மீன் சமைப்பது இல்லை” என்று ரேச்சல் கூறியபோது அப்பாவுக்கு சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் ஒருவருக்குப் பிரியமானதை இன்னொருவர் அறிந்து செயல்படும்போதுதான் திருமண வாழ்வில் வெற்றிபெற முடியும். 

 

நாமும் இந்த உலகில் இயேசு கிறிஸ்துவை பிரியப்படுத்தும்படி வாழ அழைக்கப்படுகிறோம். “நாம் செய்கிற இந்தச் செயல் கர்த்தருக்குப் பிரியமா? இதனை ஆமோதிப்பாரா?” என்று அவரது சித்தத்தை அறிந்து வாழும் போது, நாமும் பாவத்திற்கு விலகி வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். தேவ சித்தத்தை விட்டு விலகுவதே பாவம். ஆதி மனுஷன் அவ்வாறே விலகி பாவம் செய்தான். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய இயேசுகிறிஸ்து நம்மைப் போலவே மாம்சமும் இரத்தமும் உடைய மெய்யான மனுஷனாக இவ்வுலகிற்கு வந்தார். அவரது தெய்வீகத்திற்கும் மனுஷீகத்திற்கும் உள்ள சம்பந்தம் நமக்குத் தெரியாது. ஆனால் தெய்வீகத்திற்கு சோதனையுமில்லை, பாவமுமில்லை. எனவே இயேசுகிறிஸ்து பூரண மனுஷராகவே சோதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பரிசுத்தராக வாழ்ந்தது எப்படி? 

 

பிரியமானவர்களே! இயேசுகிறிஸ்து பிதாவுக்குப் பிரியமானவைகளை எப்பொழுதும் செய்ததால் பிதாவோடுள்ள ஐக்கியத்தாலும், தேவ ஆவியின் பலத்தாலும், ஊக்கமான ஜெபத்தினாலும் சோதனைகளை ஜெயித்தார். பாவத்திற்கு NO சொல்ல முடியாதிருக்கிற நமக்கு உதவியாகக் கைகொடுத்தார். ஏனெனில் இந்தப் பாவ உலகில் அவர் வாழ்ந்தபோது, சாத்தானாலும், சத்துருக்களாலும், பொது ஜனங்களாலும் இனத்தாராலும், சீஷர்களாலும் நெருக்கப்பட்டும் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யாததினால் சோதிக்கப்படுகிற நமக்காக அவர் பரிதபிக்கவும், உதவி செய்யவும் வல்லவராய் இருக்கிறார். எனவே இயேசுகிறிஸ்துவின் சித்தத்தையே நமது சித்தமாக்கிக் கொள்ளும்போது அவரையே பற்றிக் கொண்டிருக்கும் போது அவரே நமக்காக எல்லாக் காரியங்களிலேயும் உதவி செய்வார். அல்லேலூயா!

- A.பியூலா

 

ஜெபக்குறிப்பு:

7000 ஊழியர்களைக் கொண்டு ஒரு இலட்சம் கிராமங்களை சந்திக்க எடுக்கும் பிரயாசங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet grandpashabet betgit radissonbet