Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  05-02-2021
Share:

By Village Missionary Movement

Friday, 05-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  05-02-2021

நன்மைக்கு ஏதுவாக 

“ஆயினும் நாம் ஒரு தீவிலே விழ வேண்டியதாயிருக்கும் என்றான்.” – அப். 27:26

கரீபியன் கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று மோசமான வானிலை காரணமாக மிகவும் தடுமாறியது. மாலுமி பயந்ததுபோலவே கப்பல் வேறு திசையில் பயணித்தது. முடிவில் பாறையில் மோதி, கப்பல் உடைந்து அதில் சிலர் மரித்துப் போனார்கள். இப்படி மரித்துப் போனவர்களில் அதில் பயணித்த போதகரின் மனைவியும் ஒருவர். இறுதியில் கையில் கிடைத்த பலகைத் துண்டை ஒவ்வொருவரும் பிடித்துக்கொண்டு கடலில் மிதந்தவாறு அருகிலிருந்த தீவின் கரையில் சேர்ந்தனர். இதைக் கண்ணுற்ற போதகர் வாழ்க்கையின் வெறுப்பின் உச்சத்திற்கே போய்விட்டார். செய்வதறியாமல் திகைத்துப் போய் அழுது கொண்டிருக்கும் போதகரை அத்தீவில் உள்ள ஒருவர் பார்த்து “ஐயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்றார். அவரும் தன் அழுகையை அடக்கியவாறு, “உங்களுக்கு என்னை எப்படி தெரியும்?” என்று கேட்டார். “ஐயா நாங்கள் அநேக நாட்களாக இத்தீவில் உள்ள சபைக்கு ஒரு போதகரை அனுப்பி தாரும் இயேசுவே என்று ஜெபித்துக் கொண்டு வருகிறோம். எங்கள் ஜெபத்திற்கு கிடைத்த பதில்தான் நீங்கள்” என்றாராம். வேதனையின் உச்சத்தில் இருந்த போதகர் தேவனுடைய வழி நடத்துதலைக் கண்டு ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப்படுத்தினார். ஆம், நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு புயல்களின் மத்தியிலும் தேவனுடைய அற்புதங்களும், நன்மைகளும் இருப்பது நிச்சயமே! 

இன்றைய வேதபகுதியில், பவுலுடன் பிரயாணம் பண்ணின கப்பலானது கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களினால் அநேக நாட்களாக தத்தளித்துக் கொண்டிருக்கிறதை வாசிக்கின்றோம். இறுதியில் கப்பல் ஒரு தீவிற்கு செல்ல அனைவரும் உயிர் தப்புகிறார்கள். செல்லும்படி புறப்பட்ட இடத்திற்கு செல்லாமல் முகவரி தெரியாத ஒரு இடத்திற்கு பவுல் கொண்டு செல்லப்படுகிறார். ஆனால் அப்படி கரைதப்பி சென்ற அத்தீவில் பவுலுக்கென்று அநேக ஊழியங்களை ஆண்டவர் ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். தேவ சித்தத்தின் மையத்தில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் அது சகலமும் நன்மைக்கு ஏதுவாக இருக்கும். இந்தச் செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருடனும் ஆண்டவர் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் கடந்து போகக்கூடிய சூழ்நிலையைப் பார்த்து ஏதோ வாழ்க்கையில் பெரிய தவறு நடந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். தீமையை நன்மையாக மாற்றுகிற தேவன் உங்களுடன் இருக்கிறார். அவர் ஆச்சரியமான வழிகளைத் திறப்பார்.
-    P. ஜேக்கப் சங்கர்

ஜெபக்குறிப்பு:
நமது தோழமை ஊழியர்களின் மூலம் சந்திக்கப்படும் ஆலயமில்லாத கிராமங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking casibom giriş perabet holiganbet matbet perabet perabet giriş instagram ban service pashagaming pashagaming giris gorabet gorabet giris grandpashabet çarkbet çarkbet giriş deneme bonusu casibom giriş casibom vaycasino vaycasino giriş casibom meritking casibom casibom giriş meritking meritking giriş holiganbet jojobet casinoroyal grandpashabet holiganbet teosbet betgit grandpashabet gameofbet radissonbet tambet cratosroyalbet realbahis realbahis giriş