Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-08-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 21-08-2022 (Kids Special)

 

Waste பண்ணாதே 

 

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” - மத்தேயு 6:11

 

ஹலோ குட்டிச்செல்லங்களே! நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடுவீங்க. ஓ... 4 முறை சாப்பிடுவீங்களா? சரி... சரி... healthy food சாப்பிடணும். Pocket items, junk food இதையெல்லாம் avoid பண்ணனும். okவா. ரசம் சாதம் கிடைச்சாலும், பிரியாணி கிடைத்தாலும் எந்த சாப்பாட்டுக்கும் Jesusக்கு thank பண்ணிட்டு சாப்பிட பழகணும்.

செய்வீங்கதானே! சரி கதை கேட்கலாமா!

 

ஒருநாள் ஒரு வீட்டுல Prayer Meeting நடந்தது. Meeting முடிந்ததும் எல்லாருக்கும் உணவு ஆயத்தம் செய்திருந்ததால் குட்டி பிள்ளைகளெல்லாம் முதல்ல சாப்பிட ஆரம்பித்தார்கள். ஒரு குட்டி பாப்பா கொஞ்சம் மட்டும் சாப்பிட்டதும் மீதி சப்பாட்டுலேயே கை கழுவிட்டா. அப்படி செய்யக்கூடாதில்லையா? உனக்கு சாப்பிட முடியலைன்னா அப்பா – அம்மாகிட்ட குடுக்கணும். Waste பண்ணக்கூடாது. நீங்க எல்லாரும் சாப்பாட்டை Waste பண்ண மாட்டீங்கல்ல. நல்ல பிள்ளைங்க. இதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு தாத்தா வேகமா வந்து சாப்பாட்டோட கைகழுவின அந்த தட்டை எடுத்து தண்ணீரை மட்டும் வடித்துவிட்டு அதுலயே சாப்பாடு வாங்கி சாப்பிட்டாங்க. பக்கத்துல இருந்த இன்னொரு தாத்தா என்ன நீங்க கை கழுவின எச்சில் தட்டுலயே சாப்பிடுறீங்கன்னு கேட்டாராம். 

 

இயேசப்பா தந்த சாப்பாட்டை Waste பண்ணக்கூடாதில்லையா? அந்த குட்டிப் பாப்பாவுக்கு தெரியல. இந்த உணவு கிடைக்காம எத்தனை குட்டிப் பிள்ளைகள் பசியோடு உறங்குறாங்க என்று சொல்லிக்கொண்டே ரசித்து, ருசித்து சாப்பிட்டார். இதைக் கேட்ட பக்கத்திலிருந்த தாத்தா நானும் இனி சாப்பாட்டை Waste பண்ணாம என் குடும்பத்திலுள்ளவர்களுக்கும் சொல்லிக்கொடுப்பேன் என்ற தீர்மானத்தோடு அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்.

 

என்ன குட்டீஸ்! Story supera இருந்ததா... கேட்டுட்டு இப்படியே விட்டுவிடக்கூடாது. நீங்களும் உணவை Waste பண்ணக்கூடாது. உங்க Friends –க்கும் சொல்லிக்கொடுக்கணும். எனக்கு non-vegதான் ரொம்பப் பிடிக்கும். Veg. பிடிக்காது. பிடிக்காத சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்கக்கூடாது குட்டீஸ். daily உனக்கு கிடைக்கிற உணவு Jesus கொடுத்ததுதான் அதை வீணாக்காமல் இருந்தால் பசியோடிருக்கிற யாரோ ஒருவருக்கு உதவி செய்கிறாய் அப்படித்தானே! நல்ல விஷயம் கற்றுக் கொடுத்ததற்கு Jesusக்கு நன்றி சொல்லிடலாமா? Thank You Jesus. 

- Sis.தெபொராள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet cashwin grandpashabet radissonbet palacebet amgbahis cratosroyalbet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet