Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம் : 28-08-2022 (Kids Special) 
Share:

By Village Missionary Movement

Sunday, 28-Aug-2022

இன்றைய தியானம் : 28-08-2022 (Kids Special) 

 

முதலும்... முடிவும்...

 

“தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.” – நீதிமொழிகள் 22:29

 

ஒரு நாட்டில் சிலை வடிப்பதற்கான போட்டி நடைபெற்றது. அதில் பல சிற்பிகள் கலந்துகொண்டார்கள். சிற்பிகள் என்றால் யாரென்று தெரியுமா? ம்ம்.... Very good. சிலைகளைச் செய்கின்ற சிற்பக் கலைஞர்களுக்கு இடங்கள் குறிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் அழகான சிலை ஒன்றைச் செய்யவேண்டும். இதுதான் போட்டி. அதுவும் மண்ணினாலே செய்யவேண்டும். சிற்பம் செய்வதற்குத் தேவையான பொருட்களெல்லாம் கொடுக்கப்பட்டது. போட்டியும் ஆரம்பமானது. 

 

ராஜூ என்ற அண்ணன் மிகவும் கவனமாகச் செய்ய ஆரம்பித்தான். அழகிய வடிவத்தில் தன் சிற்பத்தைச் செய்து முடித்து எட்டாவது நாளில் இன்னும் மெருகூட்டி அழகுபடுத்த சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொண்டே இருந்தான். 9 –வது நாள் முடிவில் கலந்துகொண்ட அனைவரும் தங்கள் வேலைகளை முடித்து ஓய்ந்திருந்தார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கிறது என்று ஏதேதோ செய்து கொண்டிருந்தார் ராஜூ. பின் சிற்பத்தைச் சுற்றியுள்ள இடங்களையெல்லாம் சுத்தம் செய்தார். கவரைக் கொண்டு அந்த சிலையை மூடி வைத்தார். தேவையில்லாத வேலைகளையெல்லாம் செய்கின்றான் இந்த ராஜூ என்று மற்ற சிற்பிகளெல்லாம் கேலிசெய்து சிரித்தார்கள். ராஜூ எதையும் பொருட்படுத்தாமல் தன் வேலையைக் கவனமாகச் செய்து முடித்தான். அடுத்த நாள் காலையில் போட்டியின் முடிவைக் காண எல்லோரும் ஆயத்தமாய்க் காத்திருந்தனர். சிலைகளைக் கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். என்ன ஆச்சுனு கேக்குறீங்களா? திடீரென்று அதிகாலையில் பெய்த பனிப்பொழிவினால் சிற்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. கவரை எடுத்துப் பார்த்தால் ராஜூவின் சிலை மட்டும் அப்படியே அழகாக இருந்தது. அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. ராஜாவின் அரண்மனைக்குச் சிற்பம் செய்வதற்கு சிற்பியைத் தேடித்தான் இந்தப் போட்டி நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்ற சிற்பிகள் தாங்கள் ஏனோதானோவென்று செய்த செயல்களை நினைத்து வருத்தப்பட்டார்கள். ராஜூ அண்ணனுக்கு பரிசும், அரண்மனையில் சிற்பம் செய்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.

 

அன்புத் தம்பி, தங்கச்சி, யார் என்ன சொன்னாலும் School –ல கொடுக்கின்ற Home Work, அம்மாவுக்குச் செய்கின்ற உதவி இப்படி உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கவனமாக ஜாக்கிரதையாக செய்வாயானால், பரிசும் பாராட்டும் உன்னைத் தேடி வரும். அது மட்டுமா? இயேசப்பாவும் உன்னைத் தேடி வருவாங்க! உன்னை உயர்த்தி வச்சு அழகு பார்ப்பாங்க! என்ன குட்டீஸ்! Ok தானே.

-Mrs.அன்புஜோதி ஸ்டாலின்

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள 

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம்

(Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு:

+91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet