Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-08-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 30-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 30-08-2022

 

பாலியல் வன்முறைகள் 

 

“லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.” - ஆதி.34:1

 

தேவ மனுஷன் யாக்கோபின் குடும்பத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் ஒன்றை இன்றைய வேத பகுதியில் வாசிக்கின்றோம். யாக்கோபிற்கு இருந்த ஒரே ஒரு குமாரத்தி தீனாள். சீகேமுடைய பட்டணத்தில் இருக்கும் பெண்களை பார்க்கச் சென்ற இடத்தில், பாலியல் வன்முறைக்கு உட்பட்டதை வாசிக்கின்றோம். பெண்களுக்கு எதிரான இவ்வகைக் குற்றங்கள் காலங்காலமாக எல்லா இடங்களிலும் நடந்துவருகின்றன. இந்தியாவில் காவல் நிலையங்களிலும் தினமும் 88 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன. சராசரியாக ஆண்டிற்கு 20,000 -த்துக்கு மேற்பட்ட பாலியல் வழக்குகள் நம் தேசத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

 

2012 –ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாலியல் வன்முறையாளர்கள் அந்த இளம்பெண்ணிடம் கொடுமையான காரியங்களைச் செய்தனர். அப்பெண் “தன் ஆண் நண்பரோடு ஏன் வெளியே வந்தாள்?” என்பது மக்களின் ஆதங்கம். அந்தப் பெண்ணாகவே பாலியல் தாக்குதலை வரவழைத்தாளா? என்ற கேள்விகளும், நம் தேசமெங்கும் எதிரொலித்தது. “ஜஸ்ட், ஒரு வாக்கிங் போய் வருவோம்” என்று நினைப்பதுகூட அநேக இடங்களில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி விடுகிறது. பெண்கள் பாதுகாப்பற்ற விபரீத உலகில் வாழ்கின்றனர் என்பதை மறுக்கவே முடியாது.

 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, கர்த்தர் நம்மைக் காக்கிறவர். அது அவர் வகுத்திருக்கும் எல்லைக்குள் நாம் இருக்கும்போது, நிச்சயமாகப் பாதுகாப்பு உண்டு. இன்றைய தலைமுறையினர் மொபைல் ஃபோன் மூலம், இவ்வித பிசாசின் கண்ணியில் சிக்கி அழிந்து போகிறதுண்டு. எந்த இடத்திற்குச் சென்றால் நமக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நல்ல உணர்வின் நிச்சயத்தை ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கின்றார். ஆகவே ஞானத்தோடு வாழ்வோம். இதை உதாசீனப்படுத்தும்போது தேவையில்லாத வருத்தங்களை வருவித்துக் கொள்கிறோம். இவ்வகையான குற்றச் சம்பவங்கள் நம் தேசத்தில் பெருகாதபடிக்கு கருத்தாக நாம் ஜெபிப்போம்.

- P.ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு:

ஊழியத்தை ஜெபத்தாலும், காணிக்கையாலும் தாங்கி வரும் பங்காளர்களுடைய குடும்பங்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet