Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-09-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 11-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 11-09-2022

 

சிறந்த பண்பு      

 

“நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்;... தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.” - சங்கீதம் 32: 5     

 

Hello குட்டி செல்லங்களே! How are you? ஒவ்வொரு வாரமும் கதை கேட்டு போர் அடிக்கலை இல்லையா? சந்தோஷமா கதை கேட்பதைப்போல அதன்படி வாழவும் செய்யணும். Ok வா?

 

“ஏய் School -க்கு நேரமாயிடுச்சு, என்னடி பண்ற? வேகமா வா....Assembly prayer ஆரம்பிக்க போகுது. PT Teacher வேற கேள்வி கேட்டே கொன்றுவாங்க” என்றாள் மாலா. “இதோ வந்துட்டேன்” என்று சைக்கிளை எடுக்கப்போனாள் கலா. இரண்டுபேரும் சைக்கிளை அழுத்திக் கொண்டிருக்கும் போது, கீதா மூச்சிரைக்க ஓடி வந்தாள். “ஏய் மாலா, என் சைக்கிள் ரிப்பேர் ஆயிடுச்சு. இன்றைக்கு மட்டும் உன்னோட சைக்கிள்ல வாரேன்பா” என்றாள். “நீ குண்டுப் பூசணி வேற, உன்னை வச்சு ஓட்ட முடியாதே” என்றாள் கலா சிரித்துக்கொண்டே....

 

“இல்லை, இல்லை நான் ஓட்டுகிறேன், நீ பின்னாடி உட்கார்ந்துக்கோ” என்று கீதா சொன்னதும் சைக்கிளில் மூன்று பேரும் ஜெட் வேகத்தில் School–க்கு போய் சேர்ந்தார்கள், குட்டீஸ் நீங்களும் அவசர அவசரமா School– க்கு கிளம்புவீங்களா? அப்படியிருக்கக் கூடாது. சீக்கிரமா எழுந்து நிதானமா கிளம்பினால், Tension இல்லாம சந்தோஷமா போகலாம், அப்படித்தானே! மாலா, கலா, கீதா மூன்று பேரும் தோழிகள். கீதா நல்ல பிள்ளையா இருக்கணும்னு நினைப்பா. அன்றைக்கு Teacher கொஞ்ச நேரம் Office போக வேண்டியிருந்ததால் Class Leader – ஐ அழைத்து “வகுப்பில் யாராவது பேசினால் பெயர் எழுதி வை “ என்று சொல்லிவிட்டு போனார்கள். இந்த மூன்று பேரும் சல சலன்னு பேசிக்கொண்டே இருந்ததால Leader பெயர் எழுதி, Miss வந்ததும் கொடுத்து விட்டாள். கலாவும், மாலாவும் “ Miss நாங்க ஒன்னும் பேசல, அவதான் எங்க பெயரை சும்மா எழுதி கொடுத்தாள்” என்று பொய் சொன்னார்கள். கீதா வந்து “இல்லை நாங்க பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னதும் “எல்லோரும் இவளுக்கு Clap பண்ணுங்கன்னு” Miss சொன்னங்க. செய்த தவறை ஒத்துக்கொள்வது தான் சிறந்த பண்பு, செய்த தவறை மறைப்பதால் அங்கே சண்டையும் குழப்பமும் உண்டாகும். இதனால் உங்கள் குடும்பமும் சுற்றி இருக்கிறவர்களும் பாதிக்கப்படுவார்கள். உன் தவறை ஒத்துக்கொள்ளும் போது அங்கே சந்தோஷமும் சமாதானமும் உண்டாகும் “என்ன பிள்ளைகளே! நீங்கதான் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டியா இருக்க வேண்டும்” என்று Teacher அன்றைக்கு அருமையான நடைமுறைப் பாடத்தை சொல்லிக் கொடுத்தார்கள். என்ன குட்டீஸ், நீங்களும் Teacher சொன்னதைக் கேட்டீர்களா?... Follow பண்ண ரெடியா?

- A. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom