Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-09-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 18-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 18-09-2022 (Kids Special)

 

எலிக்குட்டியின் சேட்டைகள்  

 

“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” - கொலோ. 3:20       

 

ஒரு எலி தன் குட்டிகளோடு ஒரு வீட்டுப் பக்கத்திலுள்ள பொந்தில் வாழ்ந்து வந்தது. வீட்டிற்குள் எலி வர ஆரம்பித்தால் தொல்லை தாங்க முடியாதில்லையா? தக்காளி, உருளைக்கிழங்கு, அரிசி மூட்டை இவைகளை விட்டு வைப்பதில்லை. ஏன்? உடைகளைக் கூட கடித்து நாசம் பண்ணிவிடும். என்ன குட்டீஸ் உங்க வீட்டிலும் எலித் தொல்லை தாங்க முடியலையா? சரி சரி... வாங்க இந்த எலிக்குட்டியிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதைப் பற்றி கதை கேட்கலாம்.

 

அம்மா எலி தனது மூன்று குட்டிகளுக்கும் உணவு கொடுத்து பராமரித்து வந்தது. “இந்த வீட்டு வாசல் வழியே உள்ளே போகக்கூடாது. மீசைக்காரன் உங்களைப் பிடித்து கொன்று விடுவான்“ என்று தன் குட்டிகளுக்கு அறிவுரை சொன்னது. சரியம்மா என்று மூன்று குட்டிகளும் கோரசாக சொன்னது. அம்மா எலி வெளியில் சென்றதும் சேட்டைக்கார எலிக்குட்டி பொந்திற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தது. “ஆ... அழகான வெளிச்சம்.. இந்த வீடு பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக பெரியதாக இருக்கிறது. இந்த வீட்டிற்குள் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என நினைத்தது குடுகுடுவென ஓட ஆரம்பித்தது. வீட்டில் யாருமே இல்லை. “சோஃபாசெட் ஜம்.. ஜம் ன்னு சூப்பராக இருக்குதே!” லைட், பேன், பீரோ, கட்டில் இதையெல்லாம் பார்த்து அசந்துபோனது. “அம்மா வேற மீசைக்காரன் இருப்பார்னு சொன்னாங்களே! சரி வீட்டுக்கு போய்டலாம் “ –னு நினைத்த எலிக்குட்டிக்கு… கருவாட்டு வாசனை மூக்கைத் துளைக்கவே கிச்சன் பக்கமா எட்டிப் பார்த்தது. “ச்சே எனக்காகவே சாப்பாடு ரெடி பண்ணி வச்சிருக்காங்களே! இன்றைக்கு நமக்கு விருந்துதான்” –னு நினைத்து நல்லா வயிறு நிறைய சாப்பிட்டது. திடீரென்று “டமால்“...ன்னு ஒரு சத்தம் கேட்டது. கதவை திறந்து உள்ளே வந்தார் வீட்டுக்காரர். “அப்பாடா எவ்வளவு பெரிய மீசை. இவர் மீசையளவு கூட நான் இல்லையே! எப்படித் தப்பிக்கிறது?” என்ற பயத்தில் அங்குமிங்கும் ஓடியது. ஜன்னல் கதவையெல்லாம் அடைத்துவிட்டு மீசைக்காரன் நடந்து வருவதைப் பார்த்தாலே, “இன்றைக்கு நம்ம கதை முடிந்தது“ என்று நினைத்து, தப்பித்துக் கொள்ள வழியே இல்லையா? என அங்கலாய்த்த எலிக்குட்டி கண்ணில் கழிவு நீர் போகும் குழாயில் உள்ள சின்ன கேப் தெரிந்தது. தொப்பென்று குதித்து, “அப்பாடா இனி அம்மா பேச்சைக் கேட்டு, நல்ல எலிக்குட்டியா இருப்பேன்” என்று பெருமூச்சு விட்டது.   

 

அருமையான குட்டிப்பிள்ளைகளே, “அம்மா பேச்சைக் கேட்காததால ஆபத்து வந்தது” கதையை கேட்டீங்கள்ல. உங்க நன்மைக்கு சொல்கின்ற பெற்றோரின் பேச்சைத் தட்டக் கூடாது. உங்கள் கீழ்ப்படிதல் தான் ஆசீர்வாதத்தின் வழியாக இருக்கும். என்ன குட்டீஸ்! ஓகே தானே! 

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet