Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-09-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 29-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 30-09-2022

 

பலவந்தம்  

 

“…பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்” - மத்தேயு 11:12 

 

நம் நாடு அடிமைக் கட்டுக்குள் இருந்தபோது நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் காந்திஜி, நேருஜி, ராஜாஜி போன்றோர் போராட்டங்களை நடத்தியும், உண்ணாவிரதங்கள் இருந்தும் அகிம்சை முறைகளைப் பிரயோகித்தும் பலவந்தம்பண்ணி விடுதலை பெற்றனர். 

 

எரிகோவிலிருந்து ஆண்டவர் இயேசுகிறிஸ்து வருகிறார் என்று கேள்விப்பட்ட குருடன் பர்திமேயு “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று கூப்பிட்டபோது சீஷர்கள் அவனை அதட்டினார்கள். அவனோ “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டு பலவந்தம் பண்ணி பார்வையைப் பெற்றுக்கொண்டான்.

 

தாமஸ் ஆல்வா எடிசன் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். மின்சாரம் கண்டுபிடிக்க 999 முறை முயற்சிசெய்தும் தோற்றுவிட்டார். ஆனால் 1,௦௦௦-வது முறை பலவந்தம் பண்ணி மின்சாரத்தைக் கண்டுபிடித்து வெற்றிபெற்றார். அவர் ஒரு ஜெபவீரராய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஒரு விதவை தனக்கு நியாயஞ்செய்யுமாறு அந்த பட்டணத்திலுள்ள நியாயாதிபதியிடம் திரும்பத் திரும்ப விண்ணப்பம் பண்ணிக்கொண்டேயிருந்தாள். இவள் என்னை அடிக்கடி அலட்டாதபடி அவளுக்கு நியாயஞ்செய்வேன் என்று சொல்லி, அந்த நியாயாதிபதி நியாயம் செய்தான். விதவை அநீதியான நியாயாதிபதியை பலவந்தம் பண்ணி நியாயம் செய்ய வைத்தாள். (லூக்கா18: 4-8) இப்படியிருக்கையில், நீதியுள்ள நியாயாதிபதியாகிய ஆண்டவர் இயேசுகிறிஸ்து நமது விண்ணப்பங்களுக்குச் செவிகொடாமலிருப்பதெப்படி? 

 

இந்த உலகத்தில் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடும், விசுவாசத்தோடும், தேவனுக்குப் பிரியமாய் நடந்து பரலோக ராஜ்யத்தைப் பலவந்தம்பண்ணிப் பிடித்துக் கொள்வோம். பலவந்தம் பண்ணுதல் என்பதற்கு இப்படிப் பல எடுத்துக்காட்டுகள் வேதத்தில் உண்டு. இதை வாசிக்கின்ற நாம் அநேகக் காரியங்களுக்காக பலவந்தம் பண்ணுகிறோம். அவற்றுள் பெரும்பாலானவை உலகப் பிரகாரமான காரியங்களே ஆகும் அல்லது உலக மனிதர்கள் பண்ணும் பலவந்தங்கள் ஆகும். ஆனால் வேதத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரு காரியத்தைக் குறித்து பலவந்தம் பண்ணும்படி கூறுகிறார். அது பரலோக ராஜ்யம். எனவே பரலோக ராஜ்யத்தைப் பலவந்தம் பண்ணி அதைப் பிடித்துக்கொள்வோம்.

- Mrs. ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு: 

“கண்மணியே கேள்” என்ற புத்தகம் மற்றும் நம்பிக்கை டிவி –யில் ஞாயிறுதோறும் மாலை 6.00 மணி முதல் 6:30 மணி வரை ஒளிபரப்பப்பட்டு வரும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம், வாலிபப் பெண் பிள்ளைகள் மத்தியில் கர்த்தர் எழுப்புதலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al padişahbet padişahbet giriş