Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01-10-2022
Share:

By Village Missionary Movement

Friday, 30-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 01-10-2022

 

அன்பு செய் 

 

“…உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக ... என்றார்.” - மத்தேயு 19:19

 

LOVE என்றழைக்கப்பட்ட தொண்டு நிறுவனம் ஓன்று இருந்தது. “Love in the Name of Christ”. இதுவே இந்த நிறுவனத்தின் விரிவாக்கம் ஆகும். அதாவது “இயேசுவின் பெயரால் நேசி” என்று பொருள்படுகிறது. இந்த இயக்கத்தின் இலக்கு, சபைகளை ஓன்றுதிரட்டி, புண்பட்டதும் தேவை நிறைந்ததுமான இவ்வுலகைக் கிறிஸ்துவின் பெயரால் எட்டிப் பிடிப்பதாகும். ஆனால் காலப்போக்கில் தரிசனம் மாறிவிட்டது. தாங்கள் இயேசுவின் நாமத்தில் செயல்படுவதாக கூறியும், உண்மையில் தங்களுடைய லாபத்திற்காகவே செயல்பட்டிருக்கிறார்கள். யூதர்களுக்கு “கிறிஸ்துவைக் கொன்றவர்கள்” என்ற மோசமான பெயர் உண்டு. இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை பயங்கரமாக அழித்த ஹோலோகாஸ்டின் தன்னுடைய கொடும் செயல்களை சில வேளைகளில் நியாயப்படுத்தினார். இப்படி தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லி சக மனிதரை கொன்று குவித்தவர்கள் இந்த உலகில் ஏராளம், ஏராளம்!

        

இன்றைய வேத பகுதியில், இயேசு தன்னிடத்தில் வந்த நியாயசாஸ்திரியிடம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான வழியை “அன்பு” என்ற ஒரு சொல்லில் விளக்கிக் காண்பித்தார் “இயேசுவை நேசிக்கின்றேன், ஆனால் சிலரை மட்டும் என்னால் நேசிக்க முடியாது“ என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இயேசுவை நேசிக்க வேண்டும். நம்முடைய உதவி யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அவர்களையும் ஏற்று நேசிக்க வேண்டும். இந்த செய்தியானது, இப்பொழுது நீங்கள் நேசிக்கும் எல்லைகளையும் தாண்டி, ஆண்டவர் வகுத்திருக்கின்ற பாதைகளில் உள்ளவர்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய ஜென்ம சுபாவமானது நமக்குப் பிரியமாய் இருப்பவர்களை மட்டும் நேசிக்கச் சொல்லும். ஆனால் அது அல்ல, “எல்லோரையும் நேசி” என்று வேதம் சொல்லுகின்றது. 

 

வேர்ல்ட் விஷன் என்ற இயக்கத்தின் ஸ்தாபகர் பாப்பியர்ஸ் கூறும்பொழுது, “தேவனுடைய இருதயம் எங்கெல்லாம் உடைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் என்னுடைய இருதயமும் உடைக்கப்படட்டும். தேவன் எதையெல்லாம் கண்டு கண்ணீர் விடுகின்றாரோ, அதேபோன்று என் கண்களிலும் கண்ணீர் வரட்டும்” என்றார். இன்றைய செய்தியின் மையக்கருவே “சக மனிதரை நேசிக்காமல், இயேசுவை நேசிக்கிறேன்” என்று சொல்வீர்களென்றால் அது ஒரு பெரிய மாய்மாலமாகும். மத்தேயு 19:19 –ன் செயல் நம் வாழ்வில் காணப்படட்டும்.

- P. ஜேக்கப் சங்கர்  

 

ஜெபக்குறிப்பு: 

இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழி நடத்த. இன்று முதல் 3-ம் தேதி வரை நடைபெறும் எழுப்புதல் சீஷத்துவ முகாமில் தேவன் முன்குறித்த வாலிபர்களை அழைத்துவர ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom