Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  13-02-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 13-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  13-02-2021

பவுல் என்ற சவுல் 

“...நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.” – அப். 26:18

“பள்ளிக்கூடத்தில் மிகவும் மோசமாக படிப்பவன். இவன் வாழ்க்கையில் உருப்படவே மாட்டான். இவன் ஒன்றுக்கும் உதவ மாட்டான்” என்று ஆசிரியர் ஒரு மாணவனைத் திட்டித் தீர்த்தார். கணக்கு பாடத்தில் படுமோசமாக மார்க் வாங்கினான் அந்த மாணவன். சரி, படிப்பில்தான் இப்படி தோல்வி என்று வீட்டில் உள்ள தோட்டத்தையாவது ஒழுங்காக பராமரிப்பான் என்று பார்த்தால் அங்கும் தோல்விதான். ஆசிரியர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டினர் என அனைவராலும் புறக்கணிக்கப்பட்டான் அவன். ஆனால், பின் நாட்களில் உலகையே திரும்பி பார்க்க வைத்தான். ஆம், அவன் தான் மாபெரும் தத்துவ விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன். 

இப்படித்தான் அப்போஸ்தலர் நடபடிகளிலே சவுல் என்ற ஒருவன் அவரது நடவடிக்கையால், செயல்களால் புறக்கணிக்கப்பட்டான். காரணம், இயேசுவை ஏற்றுக் கொண்ட குடும்பங்களை சித்திரவதை செய்தான், பயமுறுத்தினான், மேலும் கொலைக்கு துணை போனான். இப்படி மோசமான நிலையில் இருந்தவன் தான் சவுல். ஆனால், பாருங்கள் 1கொரி.1:28ல் “உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார்” எனப் பார்க்கிறோம். சவுலை தேவன் சந்தித்து அவனது வாழ்வை மாற்றி அவனைப் பவுலாக மாற்றினார். பவுல் இரட்சிக்கப்பட்ட பின்பு கிறிஸ்துவுக்காய் தன் ஜீவனையும் கொடுக்கத் துணிந்து, பல நிருபங்களை எழுதினதோடு, பல இளம் ஊழியர்களையும் உருவாக்கி, அப்போஸ்தலர் புஸ்தகத்தின் மைய நாயகனாக காணப்பட்டார். 

இதை வாசிக்கும் நண்பர்களே! ஆளைப் பார்த்து, முகத்தைப் பார்த்து இவர்களெல்லாம் தேறவா போகிறார்கள் என நினைப்போர் ஏராளம் உண்டு. ஆனால் தேவன் அற்பமாய், இழிவாய் எண்ணப்பட்டவர்களையும் தெரிந்து கொண்டு பயன்படுத்துகிறார். சர்.ஐசக் நியூட்டனைப் போல,  அப்போஸ்தலன் பவுலைப் போல உங்களது வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்ட பகுதியையும் தேவன் மாற்றி உங்களை நிலைநிறுத்தி, பயன்படுத்த முடியும். அவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள், அவருக்காக ஏதாவது செய்ய முன்வாருங்கள்! 
-    Mrs. ஜோதி ஆனந்த் 

ஜெபக்குறிப்பு:
சிறுவர் பங்குதாரர் திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபியுங்கள். 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom