Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-10-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 13-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 14-10-2022

 

உயிருள்ள உண்மை தெய்வம்  

 

“உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.” - எரேமியா 29:13

 

இதுவரை உலகம் அநேக கண்டுபிடிப்புகளைப் பார்த்து வியந்திருக்கிறது. கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். விஞ்ஞானத்தின் மீதும் தங்கள் ஞானத்தின் மீதும் அதிக நம்பிக்கை வைப்பதினால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாய் இருப்பார்கள். கடவுள் இல்லையென்று தர்க்கமும் செய்வார்கள். இதே போல் அமெரிக்காவில் வாழ்ந்த மருத்துவர் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளரான டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் என்பவரும் கடவுள் நம்பிக்கையற்று இருந்தார். ஒருமுறை தன்னிடம் சிகிச்சை பெற வந்த வயதான பெண்மணி, அவர் வாழ்க்கையில் இயேசு செய்த அற்புதத்தை விவரித்துச் சொன்னார். அதைக் கேட்ட பிரான்சிஸ், “கடவுள் என்பவர் உண்மையில் இல்லை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்” என ஆராய்ச்சியைத் துவங்கினார். ஆனால் ஆராய்ச்சியின் முடிவில் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அநேகருக்கு தனது சாட்சியை அறிவித்து, “இயேசு தான் மெய்யான தேவன்“ என்று பல்வேறு அறிவியல் ஆதாரத்தோடு விவரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

பரிசுத்த வேதாகமத்தில் (ஏசாயா43:10-15 ) வரையுள்ள வசனங்களை பார்க்கும் போது, நானே மெய்யான தேவன் என்பதை நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்க வேண்டும். நீங்களே என் சாட்சிகள். எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர், என்னையன்றி வேறு மீட்பர் இல்லை, நானே மெய்யான தெய்வம் எந்நாளும் இருப்பவர் நானே என்று தேவன் கூறுவதை வாசிக்கிறோம். 

 

பிரியமானவர்களே! இன்று “கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அநேகர். கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து மெய் தேவனாகிய இயேசுவை ருசிபார்க்காத அநேகர் “இயேசு என்னோடு பேசட்டும், அப்பொழுது நான் ஆலயத்திற்கு வருகிறேன், என்னோடு பேசட்டும், நான் வேதம் வாசிக்கிறேன், ஜெபிக்கிறேன்” என்று சொல்பவர்களும் உண்டு. அன்பானவர்களே, “சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும்“ என்று வேதம் கூறுகிறது. இன்றைக்கும் உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் தம்மை வெளிப்படுத்தி, மெய்யான தேவன் அவரே என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

- P.சிவா 

 

ஜெபக்குறிப்பு:

மாதந்தோறும் ஒரு முழுநேர மிஷனெரியை ரூ 5000 /- கொடுத்துத் தாங்கும் பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al Elexbet matbet giriş matbet instagram unban x unban twitter unban palacebet setrabet