Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31-10-2022 (Youth Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 30-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 31-10-2022 (Youth Special)

 

அடிமைத்தனம் 

 

"...எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்" - 1 கொரிந்தியர் 6:12

 

நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்கள் அவ்வப்போது எட்டிப் பார்த்துவிட்டு செல்லும். ஆனால் சில காரியங்கள் அதாவது சில பாவங்கள் நம்மை அடிமைப்படுத்தி, அடிமைகளாக வைத்திருக்கும். நாம் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பிசாசு நம் மனதை குருடாக்கி வைத்திருக்கலாம். அதில் ஒரு காரியத்தை இன்றைக்கு சிந்திப்போம். 

 

இந்த காலகட்டத்தில் அநேக வாலிபப் பிள்ளைகள் மொபைல் போனில் அடிமையாக இருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் முதலாவது பார்ப்பது தேவனையா, மொபைல் போனையா என்று கேட்டால் 90 சதவீதம் பதில் மொபைல்தான் என்று வரும். காரணத்தோடோ அல்லது காரணமின்றியோ நாம் ஒருநாளில் பலமணி நேரங்களை போனில் செலவிடுகிறோம். சரி, எப்படி நான் இந்த Addictionலிருந்து வெளிவருவது? நானும் விடவேண்டும் என்று நினைக்கிறேன் விட முடியவில்லையே என்று சொல்லுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். நம் தேவனால் உங்களை விடுதலையாக்க முடியும், 

 

"நான் அடிமைத்தனத்திலிருக்கிறேன்" என்ற உணர்வு இருந்தாலே கண்டிப்பாக நீங்கள் அதை ஜெயிக்கமுடியும். Self Control-லோடு வாழ ஆண்டவரிடம் பெலன் கேளுங்கள். ஒரு முக்கியமான காரியத்தை பார்க்க மொபைலை எடுத்தால் அதை மட்டுமே பார்க்கவேண்டும். நேரப்போக்கிற்காக தேவையில்லாததைப் பார்க்க மாட்டேன் என்று Decide பண்ணுங்க. தாவீது உரியாவின் மனைவியைப் பார்ப்பதற்காக உப்பரிகைக்கு செல்லவில்லை. உப்பரிகையில் உலாவும்போது பத்சேபாளைக் கண்டு பாவத்தில் விழுந்தான். குறிப்பாக தனக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் வீட்டில் படுத்து தூங்கினார். தூங்கி எழுந்ததும் நேரப்போக்கிற்காக உப்பரிகைக்கு உலாவச் சென்றார். அங்கு கண் அவருக்கு கண்ணியாயிற்று. கண்மணியே, வாலிப வயதில் உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அல்லது படிப்பை சிறப்பாய் செய். பொழுதுபோக்கிற்காக மொபைலில் நீ பொதுவான காரியத்தைத்தான் பார்ப்பாய். ஆனால் அதோடு தொடர்பான வீடியோக்களை தொட்டு தொட்டு தொடர்ந்து கொண்டே போய் முடிவில் உன்னை பாவத்திற்குள் கொண்டுபோய் விடும் என்பதை மறவாதே. 

 

ஒருவேளை நீ ஏதோ ஒரு பாவத்தில் அடிமைப்பட்டுவிட்டால் ஆண்டவரிடம் Open-Up பண்ணு. உபவாசம் பண்ணி ஜெபித்து விடுதலைபெற போராடு. உன் Mindல் மொபைலை எடுக்கவேண்டும் என தோன்றும்போதே அந்த எண்ணத்தை Reject பண்ணு. ஒரே ஒரு வாழ்க்கை அதை அடிமைத்தன வாழ்விற்கு விற்றுப்போடாமல், கிறிஸ்துவுக்குள் ஜெயமாக வாழத் தீர்மானி.

LET YOUR ADDICTIONS BE IN CHRIST 

- Mrs. திவ்யா பெர்னார்ட் 

 

ஜெபக்குறிப்பு:

தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ஆண்டவரை அறியாத ஜனங்களைச் சென்றடைய ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet jojobet grandpashabet radissonbet palacebet sonbahis cratosroyalbet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet