Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-11-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 03-Nov-2022

இன்றைய தியானம்(Tamil) 03-11-2022

 

பாக்கியவான்களின் சங்கீதம் 

 

“...ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” - சங்கீதம் 84:10

 

வேதத்திலுள்ள ஒவ்வொரு சங்கீதங்களையும் நாம் தியானித்துப்பார்ப்போமென்றால், ஏராளமான சத்தியங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்தநாளிலும் நாம் 84ம் சங்கீதத்தை தியானத்திற்காக எடுத்துக்கொள்ளுவோம். இதில் இச்சங்கீதக்காரன் “பாக்கியவான்“ என்னும் பதத்தை மூன்று முறை உபயோகப்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம். யார் பாக்கியவான்கள்? என்று நமக்குச் சுட்டி காட்டும் இந்த சங்கீதம் மனப்பாடம் செய்ய ஏற்றது! 

 

உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்(வச. 4):  

தேவனுடைய பிரசன்னத்திலிருக்கும் அனுபவத்தையே இது குறிக்கிறது. தேவனுடைய வீடு என்பது அவரது சமூகம். உண்மையான வாஞ்சையோடு நாம் அவரிடம் நெருங்கி, எப்போதும் அவரோடு உறவாடும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வோமானால் நாம் உண்மையிலேயே பாக்கியவான்கள் தான். நாம் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போதும் , எழுந்திருக்கும்போதும் துணிகளை மடித்து வைக்கும் போதும், சமையல் செய்யும்போதும், அலுவலகம் செல்லும்போதும் தேவனோடு பேசிக்கொண்டேயிருப்போம். ஆ! இது எத்தனை பேரின்பம்! 

 

உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷன் பாக்கியவான் (வச. 5): 

அநேகருக்கு 40 வயதைத் தொட்டதும் ஒருவித சோர்வான உணர்வு எழும்பி விடுகிறது. ஏதாவது வியாதி வந்து விடுமோ என்று செக் பண்ணுகிறோம். 60 வயதைக் கடந்ததும் உலகமே நமக்கு சீனியர் சிட்டிசன் என்னும் முதியோர் பட்டத்தை தந்து விடுகிறது. வாலிப வயதில் மேக்கப் பண்ணினோமோ இல்லையோ இப்போது இளமை தோற்றமளிக்க ஏதேதோ முயற்சி எடுக்கிறோம். பெலன் குன்றிவிடக் கூடாது என்று உணவில் மிக கவனமாய் இருக்கிறோம். நம்முடைய பெலன் நாம் சாப்பிடும் சத்தான உணவிலோ, சத்து மாத்திரை, ஊசிகளிலோ அல்ல. நம் பெலன் அவரில் இருக்க வேண்டும். நாம் அவருக்குள் பெலன் கொள்ளும்போது உன்னத பெலன், உயிர்ப்பிக்கும் பெலன் நம்மை நிரப்புவதை உணர முடியும். ஆபகூக் தீர்க்கன் போல கர்த்தர் என் பெலன் என்று வீரமுழக்கமிடுவோம். 

 

உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான் (வச. 12):

ஆம், நம் நம்பிக்கை முழுவதையும் கர்த்தர் மேல் வைப்போம். 99% கர்த்தரை நம்புகிறேன்; 1% மட்டும் நான் மனுஷீகமாக முயற்சி எடுக்கிறேன் என்று சொல்லாமல் 100% ஆண்டவரையே நம்புவோம். பாக்கியவானாய் இவ்வுலகில் வாழ்ந்து முடிப்போம்.

- Mrs. ஜெபா டேவிட்கணேசன் 

 

ஜெபக்குறிப்பு: 

நமது மிஷனெரிகளுடைய குடும்பங்களை தேவன் பாதுகாக்க, பயன்படுத்த, ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking casibom giriş perabet padişahbet padişahbet giriş holiganbet matbet perabet perabet giriş instagram ban service pashagaming pashagaming giris gorabet gorabet giris grandpashabet çarkbet çarkbet giriş deneme bonusu casibom giriş casibom vaycasino vaycasino giriş casibom meritking casibom casibom giriş meritking meritking giriş holiganbet jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet grandpashabet grandpashabet grandpashabet cratosroyalbet