Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  20-02-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 20-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  20-02-2021

மன உறுதியா, தேவ பெலனா?

“பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து...” – அப். 1:8

ஒரு பேனா, “எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாவற்றையும் சூப்பராக, ஞானமாக எழுதமுடியும்” என்று சொன்னால் எப்படியிருக்கும்? குபீர் என்று சிரிப்புத்தான் வரும். ஆனால் அது எழுதுபவருடைய கைக்குள் தன்னை ஒப்புக்கொடுத்தால் அநேகருக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவர முடியும். அதேப்போலத் தான் நாமும் தனித்து நின்று தேவனுக்கென்று எதுவும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து ஆவியானவரின் ஆளுகைக்குள் இருக்கும்போது நம்மைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். 

இந்த கண்ணோட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் சீஷனாகிய பேதுருவின் வாழ்வைச் சிந்திப்போம். அந்த பேனாவைப் போலத்தான் பேதுருவும் இயேசுவிடம் “யார் உம்மை விட்டுப் போனாலும் நான் போகமாட்டேன், யார் மறுதலித்தாலும் நான் மறுதலிக்கமாட்டேன்” என்பது போலவே பேசினார், இதையெல்லாம் பார்த்து தூதர்கள் சிரித்திருப்பார்கள். இயேசு நீ என்னை 3 தரம் மறுதலிப்பாய் என்று சொல்லியும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முடிவு, பேதுரு இயேசுவை சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினான். அவருடைய மனஉறுதி ஒன்றுமில்லாமற் போயிற்று.  ஆனால், எப்பொழுது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டு ஆவியானவரின் ஆளுகைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாரோ, அன்றுமுதல் அவர் புதிய பெலனைப் பெற்றுக் கொண்டார். எந்த ஜனத்தாரின் முன்பு இயேசுவை மறுதலித்தாரோ, அதே ஜனத்தின் மத்தியில் இயேசுவைப் பிரசித்தப்படுத்தி சாட்சியாக நின்றார். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யாரிடம் பிதற்றினாரோ, அதே யூதர்களிடம் தன் உயிரை துச்சமாக எண்ணி தைரியமாய் பேசினார். இதையெல்லாம் தன் சொந்த பெலத்தினாலா செய்தார்? அல்லவே! பரிசுத்த ஆவியானவரின் பெலனே காரணம்! 

என் அன்பு சகோதர-சகோதரிகளே! “என்னால் முடியும், நான் இதை செய்து விடுவேன்” என்று உங்கள் சுயபெலத்தால் முயன்று தோற்றுப்போன நாட்கள் போதும். நம் கைகளில் எப்படி ஒரு பேனா முழுவதுமாக தன்னை ஒப்புக்கொடுத்து நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றதோ அதேப் போல நாம் நம் வாழ்க்கையை பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுக்கும்போது, ஒரு உன்னத பெலன் நம்மை நிரப்பும். அந்த பெலத்தின் நிறைவினால் நாம் தேவ நாம மகிமைக்காக, கிறிஸ்துவின் நாமத்தைப் பறைசாற்றி, அவருக்கு சாட்சிகளாய் நிச்சயமாய் வாழ முடியும். 
-    Mrs. ஜெஸி அலெக்ஸ் 

ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் தின தியான நூல் அச்சடிக்க தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom