Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Wednesday, 07-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 07-12-2022 (Christmas Special)

 

பணித்தளத்தில் கிறிஸ்துமஸ்

 

“…இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” – லூக்கா 2:10

 

ஒரு வேலை ஸ்தலம் என்பது அனைத்துவிதமான ஊழியர்களையும் உள்ளடக்கியது. மேலும் ஒரு கிறிஸ்தவப் பணியாளர் எந்தப் பணிநிலையில் பணியாற்றினாலும், அனைத்து உடன் ஊழியர்களையும் கிறிஸ்துவுக்குள் வழி நடத்த கடமைப்பட்டுள்ளார். நம்முடைய வார்த்தையினால் மட்டும் அல்ல, நம்முடைய கிறிஸ்துவின் முன்மாதிரி வாழ்க்கை நடைமுறைகளினாலும் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம். நம்முடைய வாழ்வே நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாக மாறவேண்டும். குறிப்பாக கிறிஸ்துமஸ் காலங்களில் நம்முடைய கிறிஸ்தவ அன்பை வெளிபடுத்தும்விதமாக பரிசுப்பொருட்கள், வேதாகமங்கள், வேத வசனங்கள் பொறித்த பொருட்களைப் பரிசளிக்கலாம். மேலும் புதிய வருட ஆயத்தத்தினிமித்தம் புதிய வருட வாக்குத்தத்த வசன காலண்டர்கள் அடங்கிய அட்டை அல்லது தின வசனக் காலண்டர்களைக் கொடுக்கலாம். 

 

புறஜாதியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அவ்வளவு சுலபமாக வெளிப்படையாகக் கிறிஸ்துமஸ் நற்செய்தியைப் பகிர முடியாது. எனவே கிறிஸ்துமஸ் தினத்தன்று நமக்கு வாழ்த்துக்களைப் பகிருபவர்களுக்கு வேத வசனங்களை, கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தைப் பற்றிய குறுஞ்செய்திகளைப் பகிரலாம். மேலும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை நடத்த அவர்கள் நிறுவனங்களில் அனுமதிக்கும்போது, ஆவியானவரின் ஒத்தாசையோடு கிறிஸ்தவ உடன் ஊழியர்கள் இணைந்து உபவாசத்துடன் உடன் ஆத்துமாக்களுக்காக பாரமெடுத்து ஜெபித்து வந்து பின், அந்த நற்செய்தியை பகிரும்போது கிறிஸ்து அங்கே விதைக்கப்படுவார். மேலும் கிறிஸ்து பிறப்பின் நோக்கம் ஒவ்வொரு நாளும் உடன் பணியாளர்களின் காயங்கட்டுதலிலும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்குவதிலும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்துவதிலும் (லூக்கா 4:18, 19) நிறைவேற்றப்பட வேண்டும். 

 

ஆம், அர்ப்பணிப்பும், சாட்சியும் நிறைந்த அனுதின வாழ்வே பணித்தளங்களில் உண்மையான கிறிஸ்துமஸ் நற்செய்தியாகும். ஆமென். 

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும்,

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள்

தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

- Mrs. மெர்சி அலெக்ஸாண்டர் 

 

ஜெபக்குறிப்பு: 

“பரிந்து பேசும் எஸ்தர் மிஷனெரி” ஜெபக்குழு திட்டத்திற்கு அநேக பரிந்து பேசும் எஸ்தர் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet jojobet jojobet jojobet jojobet betgit radissonbet grandpashabet romabet nesinecasino grandpashabet casibom