Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Tuesday, 27-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 27-12-2022 (Christmas Special)

 

அதிசயத்திலும் அதிசயம்

 

“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்…” - சங்கீதம் 139:14

 

தேவன் மனிதனை தனது சாயலாக தனது சுவாசத்தை ஊதி அதிசயமாய் உண்டாக்கினார். நம் சரீர படைப்பில் அவரது ஞானத்தைப் பார்த்தால் பிரமித்து விடுவோம். நம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும் அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கின்றன. நம் மூளையில் 100 மில்லியன் நியூரான்கள் உள்ளன. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம். நம் மூளை 1 குவாட்ரில்லியன் அளவு தகவலைத் தாங்கக் கூடியது. நம் உடலில் 60 மில்லியன் உணர்வு ஏற்பிகள் உள்ளன. நம் கண்களால் 10 மில்லியன் வெவ்வேறு நிற வேறுபாட்டை காண இயலும். நம்மால் 50 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணரமுடியும். நாம் தினசரி 23,040 முறை மூச்சுவிடுகிறோம். நம் இருதயம் 1,15,200 முறை துடிக்கிறது. நம் இருதயம் உடலில் இருந்து எடுக்கப்பட்டாலும் அதிலுள்ள மின்சார உந்து விசையால் சிறிது நேரம் துடித்து தான் நிற்கும். குழந்தையின் உடலில் 300 எலும்புகளும், வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகளும் உள்ளன. நம் விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை. 

 

இப்படி தேவன் படைத்த மனித உடலையும் உடல் உறுப்புகளின் செயலையும் எண்ணிப் பார்க்கையில் அது எவ்வளவு அதிசயம்! அவர் சித்தமில்லாமல் முடி கூட உதிராது. எத்தனை பெரிய அன்பு! நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்றவர் மரண இருளின் நேரத்திலும், கண்ணீரின் பள்ளத்தாக்கிலும், ஆசீர்வாதமான நேரத்திலும் உடனிருந்து நடத்தி இருக்கிறார். 

 

இந்த ஆண்டைத் திரும்பிப் பார்த்தால் நம் ஒவ்வொரு அசைவிலும் அவர் உடனிருந்து நடத்தியுள்ளார் எனபதை உணர முடிகிறதா? அல்லது சிறு பிரச்சனைக்குக் கூட எனக்கு ஏன் இந்த நிலை, நான் மட்டும் ஏன் இவ்வாறு உள்ளேன்? நான் வெறுமையானவன் என புலம்புகிறீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நம் உடல் உறுப்புகளெல்லாம் சீராய் செயல்பட்டாலே நாம் கோடீஸ்வரர்கள் தான்! ஆம், லட்சங்களை மருத்துவரிடம் கொடுக்க வேண்டியதில்லை! நம்மை அவர் கரத்தால் அவர் சாயலில் படைத்தது மட்டும் அல்லாமல் நம் உடலில் இவ்வளவு அற்புதங்களை வைத்துள்ளதை நினைத்தால் துதிக்காமல் இருக்க முடியாது. இவ்வளவு அதிசயம் நிறைந்த நம் உடல், நம் வாழ்வு தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசு என்பதை உணருவோம்! வியாதிகள், பிரச்சனைகள், போராட்டங்கள் வந்தாலும் இந்த நொடிவரை ஜீவனோடு வைத்திருக்கிறாரே! ஆம், இதையெல்லாம் நினைத்து உங்கள் உள்ளம் நன்றியால் நிரம்பட்டும். வரும் புதிய ஆண்டை நன்றி நிறைவோடு வரவேற்போம்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு

ஆந்திரா, ஒடிஸா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet esbet sonbahis tambet grandpashabet betgit mercurecasino