Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-01.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 04-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 04-01.2023

 

அமைதி இல்லம்

 

“அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி,…’’ - மத். 8:16

 

தென்மாவட்டத்தில் ஒரு கிராம சுவிசேஷ ஊழியத்திற்கு சென்று இருந்தேன். அங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பின்பற்றும் வழிபாட்டுஸ்தலம் ஒன்று இருந்தது. அந்த இடத்தில் நெடுநாள் வியாதியில் உள்ளவர்கள் மற்றும் பிசாசு பிடித்திருந்த அநேகர் அங்குள்ள மரங்களிலும், கம்பிகளிலும் சங்கிலியினால் கட்டப்பட்டிருந்தனர். இந்த இடத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் சுகம் கிடைக்கும் என்று ஒருவித எதிர்பார்ப்பு அங்குள்ள மக்களிடம் நிலவியது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது தான் அங்கு நான் கண்ட நிதர்சனமான உண்மையாகும். இதைக் கண்டபோது ஆவியில் பாரம் கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடத்தில் பேசினார். இதைப் போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக ‘’அமைதி இல்லம்’’ என்கிற ஒரு ஊழியத் திட்டத்தை கொடுத்தார்.

 

கடந்த 26 வருடங்களாக கிராமப் பகுதிகளில் ஊழியம் செய்து வருகின்றோம். வேதம் சொல்லுகிறபடி, தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது; ஆனால் அதே வேளையில் கிராமங்களில் பிசாசு பிடித்தவர்கள், தீராத வியாதியில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட மக்களை பார்க்கும்போது சிறு ஜெபம் ஒன்றை மட்டும்தான் அங்கு எங்களால் செய்ய முடிகிறது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆண்டவரிடத்தில் ஜெபித்து விடுதலை பெறுவதற்காக பிரயாசபட்ட பொழுது ஆண்டவர் என்னிடம் தெளிவாக பேசினார். அதன்படி பத்து நாட்கள் அவர்களை எங்களிடம் தங்க வைத்து தினமும் காலையிலும், மாலையிலும் ஜெபத்தை ஏறெடுக்கவும், வேதாகமத்திலிருந்து ஆலோசனைகள் கொடுக்கவும் எண்ணினோம். இப்படியாக கட்டப்பட்டுள்ள மக்களுக்கு நமது வளாகத்தில் தினந்தோறும் ஜெபிக்க ஆரம்பித்தோம். தற்பொழுது இத்திட்டத்தின்படி ஒரு சிற்றாலயமும், மக்கள் தங்குவதற்கு சிறு சிறு அறைகளையும் ஆயத்தப்படுத்தி வருகிறோம். எப்படியாகிலும் ஒரு கூட்ட ஜனங்களை தேவனுக்கென்று ஆதாயப்படுத்தும் பணியில் அமைதி இல்லமும் சிறப்பாக தனது பங்கை நிறைவேற்றி வருகிறது. 

 

இன்றைய தியானத்தில் தேவையோடு இருக்கும் மக்களுக்கு கர்த்தருக்குள் நம்மால் இயன்றதை செய்ய முயல வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறோம். நன்றாக ஜெபிக்கிறவர்களும் உபவாசம் இருக்கிறவர்களும் இன்றைக்கு தேவபணியில் அதிகமாக தேவைப்படுகிறார்கள். இவ்வகை பிசாசுகள் உபவாசத்தினாலும், ஜெபத்தினாலுமேயன்றி வேறு எவ்வகையிலும் புறப்பட்டுப் போகாது என்று கர்த்தராகிய இயேசு கூறினார். கிராமங்களில் இவ்வகையான போராட்டத்தில் கட்டப்பட்டுள்ள மக்களுக்கு ஜெபித்து விடுதலை வாங்கித்தர முன் வாருங்கள். இணைந்து செயல்படுவோம். ஆண்டவர் நம்மை வழிநடத்துவாராக! 

- K. டேவிட் கணேசன் 

 

ஜெபக்குறிப்பு: 

கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் கட்டிடப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking perabet casibom holiganbet galabet casibom perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet casinomilyon jojobet palacebet sonbahis tambet grandpashabet betgit mercurecasino matbet